மக்கள் கலை இலக்கியக் கழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மக்கள் கலை இலக்கிய கழகம் கலைகள், இலக்கியம் ஊடாக புதிய ஜனநாயக அரசியல், பண்பாட்டை மக்களிடம் எடுத்துச் செல்லும், மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையில் செயல்படும் அமைப்பு ஆகும். இவ்வமைப்பு 1980-ல் துவங்கப்பட்டது[சான்று தேவை]. துவக்கத்தில் ஒரு சில ஆதரவாளர்களை மட்டுமே கொண்டு துவக்கப்பட்ட இவ்வமைப்பு, தற்பொழுது தமிழகம் முழுவதும் விரிந்த அமைப்பாக செயல்பட்டு வருகிறது[சான்று தேவை].

Remove ads

எதிர்ப்பு போராட்டங்கள்

பாபர் மசூதி இடிப்பையொட்டி, திருச்சி திருவரங்கம் கோவிலில் தாழ்த்தப்பட்டோர் கருவறை நுழைவுப் போராட்டம், பின்னர் அனுபவ் தேக்குப் பண்ணை அழிப்புப் போராட்டம், இறால் பண்ணை அழிப்புப் போராட்டம், தீடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் எதிர்ப்பு இயக்கம், தென் மாவட்ட சாதிக் கலவரங்களையொட்டி சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கம், ஜெயலலிதா-சசிகலா ஆகியோரின் சொத்துக்களை பறிமுதல் செய்யக் கோரி நடத்தப் பெற்ற வினோதகன் மருத்துவமனை கைப்பற்றும் போராட்டம்\, மான்சாண்டோ நச்சு விதைகளுக்கெதிரான பிரச்சார இயக்கம், தண்ணீர் தனியார்மயத்திற்கெதிரான கங்கைகொண்டான் கோகோ கோலா ஆலை எதிர்ப்பு மறியல், சென்னை ரிலையன்ஸ் ஃபிரஷ் எதிர்ப்புப் போராட்டம், சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயத்தில் தேவாரம் பாட விதிக்கப்பட்டிருந்த தடைக்கெதிரான போராட்டம் என இவ்வமைப்பு முன்னின்று நடத்திய பல போராட்டங்கள் அதன் வீரியத்தாலும், சமரசமற்ற தன்மையாலும் தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கின.[சான்று தேவை]

Remove ads

மாநாடுகள்

குறிப்பிடத்தக்க வகையில் மறுகாலனியாதிக்க எதிர்ப்பு மாநாடு, குஜராத் படுகொலையையொட்டி பார்ப்பன பாசிச எதிர்ப்பு மாநாடு, விடுதலைப் போரின் வீர மரபை நினைவு கூறும் மாநாடு ஆகிய மாநாடுகள் ஆயிரக்கணக்கான மக்களை தமிழகம் முழுவதிலுமிருந்து அணிதிரட்டின[சான்று தேவை]. இந்திய அரசால் நடத்தப்பட்ட “பசுமை வேட்டை” என்ற பெயரில் பழங்குடி இன மக்களை கொன்று குவிக்கும் போருக்கு எதிராக இவ்வமைப்பு தமிழ்நாட்டில் முதன் முதலாக மிகப் பெரிய போராட்டம்மற்றும் மாநாடு ஒன்றை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இது தவிர இவ்வமைப்பின் கிளைகள் பல பகுதிகளில் பல்வேறு பகுதிப் பிரச்சினைகளுக்காக போராடியுள்ளனர்.[சான்று தேவை]

Remove ads

பாடல் வெளியீடுகள்

இவ்வமைப்பு வெளியிட்ட பல்வேறு அரசியல் சூழல்களை ஒட்டிய புரட்சிகர பாடல் ஒலிப்பேழைகள் தமிழக அளவில் குறிப்பிடத்தக்க கவனம் பெற்றன[சான்று தேவை]. 'வசந்தத்தின் இடிமுழக்கம்', 'தேர்தல் வந்து தீர்ந்தது என்ன?', 'அசுர கானம்', 'ஆண்ட பரம்பரையா, அடிமைப் பரம்பரையா?', 'அண்ணன் வர்றாரு', 'இருண்ட காலம்', 'ஓட்டுப் போடாதே, புரட்சி செய்!', 'அடிமை சாசனம்', 'காவி இருள்', 'பாரடா உனது மானிடப் பரப்பை' முதலான பாடல் ஒலிப்பேழைகள் சாட்டையடி கொடுக்கும்[சான்று தேவை] பாடல்களும், நேர்த்தியுடன் கூடிய இசையும் கொண்டவை.

கலை நிகழ்ச்சிகள் குறும்படங்கள்

முழு நேரமாக மக்களிடையில் புரட்சிகர கலை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் தோழர் கோவன்அவர்களை தலைமையாகக் கொண்ட மையக் கலைக் குழுவை, இவ்வமைப்பு நடத்தி வருகிறது. தேயிலை விலை வீழ்ச்சியின் பின்னுள்ள மறுகாலனிய அரசியலை விளக்கும் 'தீக்கொழுந்து', பார்ப்பனக் கொடுங்கோன்மைகளை விளக்கும் 'பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியங்கள்' முதலான குறும்படங்களை இவ்வமைப்பு தயாரித்துள்ளது.[சான்று தேவை]

இதழ் வெளியீடு

1983 முதல் இவ்வமைப்பு 'புதிய கலாச்சாரம்' எனும் மாத இதழை வெளிக்கொணர்கிறது. இப்பத்திரிக்கையில் வர்த்தக விளம்பரங்கள் இடம் பெறுவதில்லை. பிரதானமாக ஒவ்வொரு மாதமும் பேருந்து, ரயில்களில் விற்பனை செய்யப்படுவதன் மூலமும், நன்கொடைகள், சந்தாக்கள் மூலமுமே இப்பத்திரிக்கை வினியோகிக்கப்பட்டு வருகிறது[சான்று தேவை]. திரு மருதையன் இப்பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். புதிய ஜனநாயக அரசியல் ஏட்டை ஆதரிக்கக்கூடியவர்கள்.

Remove ads

நிர்வாகம்

  • பொதுச் செயலாளர் - கோவன்
  • மாநில இணைச் செயலாளர் - இராவணன்[1]

துணை அமைப்புகள்

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads