யசா
செங்கிஸ்கான் உருவாக்கிய இரகசியமாக எழுதப்பட்ட குறியீட்டு சட்டங்கள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
யசா (மாற்று உச்சரிப்புகள்: யசர், யசக், ஜசக், மொங்கோலியம்: Их засаг, எகே ஜசக்) என்பது செங்கிஸ் கான் உருவாக்கிய ஒரு இரகசிய எழுத்து சட்ட விதியாகும். யசா என்ற வார்த்தைக்கு "ஒழுங்கு" அல்லது "ஆணை" என்று பொருளாகும். இச்சட்டம் இரகசியமாக வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை என்றாலும், இதுவே மங்கோலியப் பேரரசின் உண்மையான சட்டமாகும். யசா, யுத்த காலங்களில் கொடுக்கப்பட்ட ஆணைகளிலிருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது. பின்னர், இந்த ஆணைகள் கலாச்சார மற்றும் வாழ்க்கை முறைகளை உள்ளடக்குவதற்காக விரிவுபடுத்தப்பட்டன. யசாவை இரகசியமாக வைத்திருப்பதன் மூலம், ஆணைகள் திருத்தப்படலாம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படலாம். யசா, செங்கிஸ் கான் மற்றும் அவரது தத்தெடுக்கப்பட்ட சகோதரர் சிகிகுதக் ஆகியோரால் மேற்பார்வையிடப்பட்டதாக நம்பப்படுகிறது. சிகிகுதக் மங்கோலியப் பேரரசின் உயர் நீதிபதியாக (மங்கோலியம்: улсын их заргач) இருந்தார்.[1] செங்கிஸ் கான் தன்னுடைய இரண்டாவது மகனான சகடையை (பின்னர் சகடை கான்) சட்டத்தை நிறைவேற்றுவதற்காக நியமித்தார்.
Remove ads
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads