யாக்கை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யாக்கை என்பது உடலும் உயிரும் கட்டிக்கொண்டு இருக்கும் நிலைமை. எலும்பு, தசை, நரம்பு முதலான நிலப் பொருள்களும், குருதி போன்ற நீர்ப்ப் பொருளும், சூடு போன்ற நீப்பொருளும், மூச்சோட்டமாகிய காற்றுப் பொருளும், உயிரோட்டமாகிய ஆகாயப் பொருளும் என ஐம்பூதப் பொருளும் ஒன்றோடொன்று கட்டிக்கொண்டு இயங்குவதை [2] [3] யாக்கை என்பது தமிழ்நெறி.

பிணம்
'விண் விண்' என உடலில் துடிக்கும் விண்ணை ஆகாயம் என்பர். காயம் படக்கூடிய உடம்பைக் 'காயம்' என்கிறது தமிழ். காயப்படுத்த முடியாத இயக்கம் 'ஆகாயம்'. ஆகாயமாகிய உயிர் இல்லாத பொருளில் மூச்சு ஓடாது. இதனைப் பிணம் என்றனர். [4] [5] [6]
பிணச் சடங்குகள்
ஒப்பாரி வைத்து அழுதல், பிணத்தைக் குளிப்பாட்டுதல், கொட்டு-முழக்கு, பாடையில் சுமந்து செல்லல், சுடுகாட்டில் எரித்தல், [7] [8] இடுகாட்டில் எறிதல், இடுகாட்டில் புதைத்தல், முதலானவை இறந்த உடலுக்குச் செய்யும் சடங்குகள். நடுகல் விழா எடுத்தல் இறந்தவரின் உயிருக்குச் செய்யும் சடங்குகள்.[9]
தொடர்புடைய சொல் விளக்கம்
சங்கநூல் சொல்லாட்சிகள்
- சென்ற உயிரின் நின்ற யாக்கை இரு நிலம் தீண்டா அரு நிலை [13]
- இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை [14]
- குரூஉ மயிர் யாக்கைக் குடா வடி உளியம் [15]
- புல்லென் யாக்கைப் புலவு வாய்ப் பாண! [16]
- படலைக் கண்ணிப் பரு ஏர் எறுழ்த் திணி தோள், முடலை யாக்கை, முழு வலி மாக்கள் [17]
- படலைக் கண்ணி, பரு ஏர் எறுழ்த் திணி தோள், முடலை யாக்கை, முழு வலி மாக்கள் [18]
- மெய்ப்பை புக்க வெரு வரும் தோற்றத்து, வலி புணர் யாக்கை, வன்கண் யவனர் [19]
- சான்ற கொள்கை, சாயா யாக்கை, ஆன்று அடங்கு அறிஞர் [20]
- பிணம் தின் யாக்கைப் பேய் மகள் [21]
- முறி மேய் யாக்கைக் கிளை (கடுவன், மந்தி) [22]
Remove ads
யாக்கை படங்கள்
- எலும்பு யாக்கை
- தசை யாக்கை
- குருதி ஓடும் நரம்பு யாக்கை
- உணவு ஊட்டமாக ஊறும் யாக்கைகள்
- மூச்சோட்ட யாக்கை
- நினைவோட்ட யாக்கை
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads