யாமள சைவம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யாமளம் சைவப்பிரிவுகளில் ஒன்றாக வழக்கிலிருந்த மந்திரமார்க்கக் கிளைநெறி ஆகும்.[1] சிவனின் முதன்மை வடிவமாக கபாலீச பைரவரையும் அவர் தேவி, சண்டகபாலினியையும் போற்றிய இது, பொ.பி 10ஆம் நூற்றாண்டளவில் பெரும்புகழ் பெற்று விளங்கியது.[2]
யாமள நூல்கள்
யாமளர்களுக்கு முக்கியமான எட்டு நூல்கள், தம்மைத் தாமே அறிந்த எட்டு யாமளக் குருநாதர்களின் பெயர்களாலேயே அறியப்படுகின்றன. சிவத்தை உணர்ந்ததன் மூலம், இவர்கள் தாமும் சிவரூபமாக - வைரவராக மாறியதாக மூதிகங்கள் சொல்லும். இந்த எண்மரும் சுவச்சண்டர், குரோதர், உன்மத்தர், உக்கிரர், கபாலி, சங்கரர், சேகரர், விஜயர் எனும் எட்டு வைரவர்களாகப் போற்றப்படுகின்றனர். உருத்திரம், ஸ்கந்தம், பிரமம், விஷ்ணு, யமம், வாயு, குபேரம், இந்திரம் எனும் எட்டு யாமள நூல்கள், இந்த எட்டுக் குருதேவர்களால் யாமளர்களுக்கு வழங்கப்பட்டன.[3]
Remove ads
ஏனைய நூல்கள்
பிங்களமதம், ஜயத்ரதம் எனும் இரு யாமள நூல்கள் இன்னொருவகையில் யாமளர்களுக்கு முக்கியமானவை. லட்சுமி, கணேசன், சந்திரம், சக்தி, சுவச்சண்டம், ருரு, சித்தம், அதர்வணம் எனும் வேறு எட்டு நூல்கள் உப யாமள நூல்களாகக் கொள்ளப்படுகின்றன.[4]
வழிபாடு
யாமளர்கள் கபாலீசரும் கபாலினியும் ஒன்றிணைந்து காட்சியருளும் யந்திரத்தைச் சூழ தேவ - தேவியர் வீற்றிருக்கும் மண்டலத்தை வழிபடவேண்டும். இரத்தை, கராளை, சண்டாட்சி, மகோச்சூட்சுமை ஆகிய நான்கு தேவியரும், அவர்களது சேடியரான கராளி, தந்துரை, வீமவக்திரை, மகாபலை ஆகிய நால்வரும் யாமள மண்டலத்தின் நான்கு திசையிலும் வீற்றிருப்பர். இவர்கள் அனைவரையும் யாமள வழிபாட்டு மண்டலத்தில் எழுந்தருளச் செய்யும் ஓம் ஹம் சண்ட கபாலின்யை ஸ்வாஹா எனும் மந்திரம் அடியவனால் ஓதப்படவேண்டும்.[5]
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads