யாரென் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

யாரென் மாவட்டம்
Remove ads

யாரென் (Yaren) என்பது அமைதிப் பெருங்கடல் நாடான நவூருவின் ஒரு மாவட்டமும், தேர்தல் தொகுதியும் ஆகும். இதுவே அந்நாட்டின் நடைமுறைப்படியான தலைநகரமும் ஆகும்.[1] இந்நகரம் முன்னர் மொக்குவா என அழைக்கப்பட்டது.

Thumb
நவூருவில் யாரென் மாவட்டம் காட்டப்பட்டுள்ளது
Thumb
நவூரு நாடாளுமன்றம்

யாரென் நவூரு தீவின் தெற்கே அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 1.5 km2 (0.58 sq mi), மக்கள்தொகை 4,616 2007) ஆகும். யாரெனின் வடக்கே புவாடா, கிழக்கே மெனெங்கு, மேற்கே போயி ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன.

Remove ads

அரச மற்றும் நிருவாகக் கட்டடங்கள்

யாரென் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுக் கட்டடங்கள் வருமாறு

  • நாடாளுமன்றம்
  • புவி நிலையம்
  • அரசு நிருவாகக் கட்டடங்கள்
  • காவல் நிலையம்
  • தேசிய விளையாட்டரங்கு
  • ஆத்திரேலிய மற்றும் சீனக் குடியரசு தூதரகங்கள்
  • நவூரு பன்னாட்டு வானூர்தி நிலையம், நவூரு ஏர்லைன்சின் தலைமையலுவலகம்

நவூருவிற்கு அதிகாரபூர்வமான தலைநகரம் எதுவும் இல்லை.[1] யாரென் ஒரு முக்கிய மாவட்டமாக ஐக்கிய நாடுகள் அவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. யாரெனில் இருந்து நாடாளுமன்றத்திற்கு இருவர் தெரிவு செய்யப்படுகின்றனர்.

Remove ads

சிறப்பிடங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads