யுரேனியம் ஆக்சைடு
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
யுரேனியம் ஆக்சைடு (Uranium oxide) என்பது யுரேனியம் தனிமத்தின் ஆக்சைடு சேர்மங்களைக் குறிக்கும்.

யுரேனியம் தனிமம் பலவகையான ஆக்சைடுகளாக உருவாகிறது.
யுரேனியம் ஈராக்சைடு அல்லது யுரேனியம்(IV) ஆக்சைடு - UO2 இதனுடைய தாதுப் பொருள் யுரேனைட்டு அல்லது பிட்ச் பிளெண்ட்டு ஆகும்.
யுரேனியம் மூவாக்சைடு அல்லது யுரேனியம்(VI) ஆக்சைடு - UO3
மூன்றுயுரேனியம் எண்ணாக்சைடு - U3O8 அதிக நிலைப்புத்தன்மை கொண்ட யுரேனியம் ஆக்சைடு இதுவாகும். மஞ்சள்நிற அப்பமாக உள்ள இவ்வாக்சைடில் 70 முதல் 90 சதம் மூன்றுயுரேனியம் எண்ணாக்சைடு நிறைந்துள்ளது.
யுரேனைல் பெராக்சைடு - UO2O2 அல்லது UO4
யுரேனியம் ஈராக்சைடு ஆக்சிசனுடன் தொடர்பு கொள்ள நேரும் போது ஆக்சிசனேற்றம் அடைந்து மூன்றுயுரேனியம் எண்ணாக்சைடாக உருவாகிறது.
3 UO2 + O2 → U3O8; at 700 °C (970 K)
Remove ads
38 தயாரிப்பு
இரண்டாம் உலகப் போரின் போது யுரேனியம் ஆக்சைடு தயாரிப்பை “38 தயாரிப்பு” என்ற குறிப்பெயரை செருமன் விஞ்ஞானிகள் உபயோகித்தனர்.[1] [2][3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads