யுவன் சந்திரசேகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யுவன் சந்திரசேகர் (பிறப்பு: 1960) தமிழின் முக்கியமான கவிஞர், புதின எழுத்தாளர், சிறுகதை ஆசிரியர். பின் நவீனத்துவ பாணியிலான கதைகளை எழுதக்கூடியவர். நகைச்சுவைத் தன்மையும் விளையாட்டுத் தன்மையும் கொண்ட கதைகள் இவை. எல்லாவகையான வட்டார வழக்குகளையும் சிறப்பாக கலந்து எழுதுவார். ஒரேகதையை பல கதைகளின் தொகுப்பாக எழுதுபவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
இவரது இயற்பெயர் எம்.சந்திரசேகரன். 1960ல் மதுரை சோழவந்தான் அருகே உள்ள கரட்டுப்பட்டியில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு தேநீர்க் கடை நடத்திவந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த சந்திரசேகரன் தன் மூத்த அண்ணாவுடன் வாழ்ந்தார். அவர் யுவன் சந்திரசேகரைவிட இருபது வயது மூத்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படித்த யுவன் சந்திரசேகர் படிப்பு முடிந்ததுமே ராமநாதபுரத்தில் வங்கி ஊழியராக பணியில் சேர்ந்தார். யுவன் சந்திரசேகரின் மனைவிபெயர் உஷா. அவர் தபால்நிலைய ஊழியர்.
Remove ads
எழுத்துத் துறையில்
ஐந்து ஆண்டுகள் இவர் கோயில்பட்டியில் வாழ்ந்தார். அப்போது தேவதச்சனுடன் அறிமுகம் ஏற்பட்டது. கல்லூரி நாட்களிலேயே யுவன் சந்திரசேகர் இலக்கிய வாசகர். தேவதச்சனுடனான உரையாடல் வழியாக கவிதைகள் எழுத ஆரம்பித்தார்.
பின்னர் சிறுகதைகளும் புதினங்களும் எழுத ஆரம்பித்தார். சிறப்பாக உரையாடக்கூடியவர். மாற்று மெய்மை என்று யுவன் சந்திரசேகர் கூறும் ஒரு கருத்து அவரது படைப்புகளில் உண்டு. அதாவது நாம் காணும் இந்த உலக யதார்த்தம் இதன் ஒரு முகமே என்றும் இன்னும் நாம் அறியாத பல யதார்த்தங்கள் உள்ளன என்றும் அவர் சொல்கிறார்.
சித்தர்கள், மாயமந்திரவாதிகள், பலவகையான அபூர்வ நிகழ்ச்சிகள் ஆகியவற்றை யுவன் சந்திரசேகர் அவரது கதைகளில் விளக்குகிறார். அவற்றை சுவாரசியமான கதைகள் வழியாகச் சொல்கிறார்.
யுவன் சந்திரசேகர் இந்துஸ்தானி இசையில் ஆர்வம் கொண்டவர். சென் பௌத்தத்தில் ஈடுபாடுள்ளவர். ஜென் கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
Remove ads
எழுதிய நூல்கள்
கவிதை நூல்கள்
- வேறொருகாலம்
- புகைச்சுவருக்கு அப்பால்
புதினங்கள்
- குள்ளச் சித்தன் சரித்திரம் (தமிழினி பதிப்பகம்)
- பகடையாட்டம் (தமிழினி பதிப்பகம்)
- கானல்நதி (உயிர்மை பதிப்பகம்)
- மணல்கேணி (உயிர்மை பதிப்பகம்)
- வெளியேற்றம் (உயிர்மை பதிப்பகம்)
- பயணக்கதை [கனடா இலக்கியத்தோட்ட விருது பெற்றது][1]
சிறுகதை நூல்கள்
- யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் (கிழக்கு பதிப்பகம்)
ஒளிவிலகல் (காலச்சுவடுப் பதிப்பகம்)
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads