யுவென்டசு கால்பந்துக் கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யுவென்டசு கால்பந்துக் கழகம் (Juventus F.C.) இத்தாலின் சீரீ ஆ சங்க கால்பந்துக் கூட்டிணைவில் விளையாடும் கால்பந்துக் கழகம் ஆகும். இது பொதுவாக யுவென்டசு எனவும், அதன் ரசிகர்களால் யுவெ என்றும் அழைக்கப்படுகிறது. இது இத்தாலியின் டூரின், பீட்மோன்ட், நகரில் அமைந்துள்ளது. 1897-ஆம் ஆண்டு டூரின் மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இக்கால்பந்துக் கழகம், இத்தாலியில் மிகப் பழமையான மூன்றாவது கால்பந்துக் கழகமாகும். மேலும் இதன் வரலாற்றில், இத்தாலியின் முதன்மைக் கூட்டிணைவிலேயே (1929-லிருந்து சீரீ-ஆ எனப்படுகிறது) பெரும்பாலும் இருந்திருக்கிறது (2006-07 பருவத்தைத் தவிர).
யுவென்டசு கால்பந்துக் கழகம் இத்தாலியில் அதிக அளவில் கோப்பைகளை வென்ற கழகமாகும். மேலும் ஐ.எஃப்.எஃப்.எச்.எஸ்.(கால்பந்து வரலாறு மற்றும் புள்ளிவிவரத்துக்கான பன்னாட்டுக் கூட்டமைப்பு) நிறுவனப் புள்ளிவிவரங்களின்படி ஐரோப்பிய கால்பந்துக் கழகங்களின் தரவரிசையில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. இக்கழகம் இருபத்தெட்டு கூட்டிணைவு வாகையர் பட்டங்களும், ஒன்பது இத்தாலியக் கோப்பைகளும், ஐந்து தேசிய உன்னதக் கோப்பைகளும், இரண்டு யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவுக் கோப்பைகளும் மற்றும் பல கோப்பைகளும் உட்பட 53 கோப்பைகளை வென்றுள்ளது. இத்தாலியில் மிக அதிக இரசிகர் பட்டாளம் உள்ள கால்பந்துக் கழகமாகவும், உலகளவில் கால்பந்து வட்டாரங்களில் பெருமதிப்புக்குரிய கழகமாகவும் இது திகழ்கிறது.
இத்தாலியின் தேசிய கால்பந்து அணிக்கு இதன் பங்கு மிக முக்கியமானது. ஆரம்பகாலம் தொட்டே இக்கழக வீரர்கள் பலர் இத்தாலிய தேசிய அணியில் இடம்பெற்றுவருகின்றனர். இத்தாலி கால்பந்து உலகக் கோப்பையை வென்ற 1934, 1982 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் இக்கழக வீரர்கள் இத்தாலிய அணியின் முக்கிய ஆட்டக்காரர்களாவிருந்தனர்.
Remove ads
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads