யூதாசு இஸ்காரியோத்து

From Wikipedia, the free encyclopedia

யூதாசு இஸ்காரியோத்து
Remove ads

யூதாசு இஸ்காரியோத்து (Judas Iscariot) என்பவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவர் இயேசுவை முப்பது வெள்ளிக்காசுகளுக்காக முத்தமிட்டு குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களிடம் காட்டிக்கொடுத்தார் என விவிலியம் கூறுகின்றது.[1][2][3]

Thumb
"யூதாசின் முத்தம்" (1866) ஓவியர்: கஸ்தவ் தோரே

யூதாசின் இறப்பு

தம்மால் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வர, அதை அவர்கள் வாங்க மறுத்ததால் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டதாக விவிலியத்தில் மத்தேயு நற்செய்தி கூறுகின்றது. ஆயினும் திருத்தூதர் பணிகளின் படி, இவர் தனது செயலுக்கு கிடைத்த கூலியைக் கொண்டு ஒரு நிலத்தை வாங்கினார் எனவும். பின்பு இவர் தலைகீழாய் விழ, வயிறு வெடித்து, குடலெல்லாம் சிதறிப்போயின என்றும், இவர் வாங்கிய நிலத்தை 'இரத்தநிலம்' என அனைவரும் அழைத்ததாகவும் குறிக்கின்றது.

Remove ads

பிற நம்பிக்கைகள்

ஞானக் கொள்கை என்னும் தப்பறைக்கொள்கை என கண்டிக்கப்பட்ட கொள்கையினைக் கொண்டிருந்த குழுவினர்களிடையே இருந்த யூதாசு நற்செய்தி என்னும் நூல், யூதாசுவே இயேசுவின் மிக நெறுங்கிய நண்பர் எனவும், அவரின் ஒரே உண்மையான சீடர் எனவும் குறிக்கின்றது. மேலும் யூதாசு இயேசுவின் அறிவுரைப்படியே காட்டிக்கொடுத்ததாகவும், இதனால் யூதாசு இயேசுவின் ஆன்மா பருப்பொருள் உலகத்திலிருந்து விடுதலை பெற உதவியதாகவும் குறிப்பிடுகின்றது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads