யோகமுத்ரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யோகமுத்ரா (yoga mutra) என்பது பத்மாசனத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப் படும் ஒரு யோகாசனம்.
- பத்மாசனத்திலேயே அமர்ந்த வண்ணம் கைகளை மட்டும் பின்னால் கொண்டு போக வேண்டும்.
- இடக்கை மணிக்கட்டை வலக்கையால் பிடித்துக்கொண்டு உடலை முன்னோக்கிக் குனிந்து கொண்டு போக வேண்டும்.
- தாடையானது தரையைத் தொட வேண்டும். எடுத்த எடுப்பில் அவ்வளவு குனிய முடியாது. நாளாவட்டத்தில் பழக்கம் ஆகும். :இதிலும் கால்களை மாற்றிப் போட்டுச் செய்யலாம்.
- இடுப்பின் கீழ்ப்பகுதியில் இருக்கும் மூலாதாரச் சக்கரத்தை நினைவிலிருத்தி இயல்பான சுவாசத்தில் இருக்க வேண்டும். :தலையையும் தோள்பட்டையையும் முன்னோக்கி வளைக்க வேண்டும்.
- தாடையை முதலில் நேராக வைத்துக் கொண்டு சிறிது நேரம் இருந்துவிட்டுப் பின்னர் வலப்பக்கம், இடப்பக்கம் என மாற்றி மாற்றி வைத்துக்கொள்ளலாம்.
Remove ads
இந்த ஆசனம் செய்தால், தோள்பட்டை வலிகள் குறையும். ஸ்பாண்டிலைடிஸ் எனப்படும் தோள்பட்டைத் தசைப்பிடிப்புக்கு நல்லதொரு பயிற்சியாக அமையும். பெரும் தொந்தி இருப்பவர்க்குத் தொந்தி குறையும். செரிமான சக்தி ஏற்படும். சர்க்கரை நோய், மூலம், வயிற்றுப் புண், குடலிறக்கம் போன்றவற்றிக்கு இந்த ஆசனம் பலன் தரக்கூடியது. பெண்கள் இதைத் தினமும் செய்து வந்தால் கர்ப்பப் பை நோய்கள் அகலும். அடிவயிறு பெரிதாக இருந்தால் குறைய ஆரம்பிக்கும்.
Remove ads
வெளியிணைப்புகள்
- யோக முத்ரா பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், மாலைமலர் நாளிதழ்ச் செய்தி
- http://www.tamilnewssite.com/yoga-exercise/yoga-mudra-asana-which-curifies-diabetes-jaundice-kidney-problems.html%5Bதொடர்பிழந்த+இணைப்பு%5D
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads