ரகுநாத் மகபத்ர
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரகுநாத் மகபத்ர (Raghunath Mohapatra, பிறப்பு: 24 மார்ச்சு, 1943) ஒரிசா மாநிலத்தின் பூரியில் பிறந்த[1], கோவில் சிற்பக் கலைஞர் மற்றும் கட்டடக் கலைஞர் ஆவார். கோவில்களின் வடிவமைப்பிலும் கற்சிலைகளின் உருவம், வடிவம், அமைப்பு ஆகியவற்றில் தேர்ந்த அறிவும் அனுபவமும் கொண்டவர்.

பிறப்பு
ரகுநாத் மகபத்ர சிற்பக் கலைஞர்கள் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் கொனாரக் கோவில் மற்றும் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூரி சகன்னாதர் கோவில் போன்றவற்றை நிர்மாணித்தவர்கள் ஆவர்.
உருவாக்கங்கள்
- ஒடிசாவில் உள்ள புகழ் பெற்ற கோவில்கள், சிலைகள், கட்டடங்கள் ஆகியவற்றில் இவருடைய கைவண்ணம் இருக்கிறது.
- 1974 இல் ஆறு அடி உயரத்தில் கற்சிலை ஒன்றை இவர் உருவாக்கினார். நாடாளுமன்ற நடுவில் இச்சிலை வைக்கப்பட்டுள்ளது.
- 18 அடி நீளமும் 15 அடி உயரமும் உடைய கொனாரக் குதிரைச் சிலையை உருவாக்கினார். புவனேசுவரத்தில் மாஸ்டர் கேண்டின் சதுக்கத்தில் உள்ளது.
- 14 அடி உயரத்தில் கொனாரக் சக்கரம் ஒன்று இவரால் செய்யப்பட்டது. இது பன்னாட்டு வரத்தகச் சந்தையில் வைக்கப்பட்டது.
- இவரால் உருவாக்கப்பட்ட 15 அடி கொண்ட இரண்டு புத்தர் சிலைகள் புவனேசுவரத்தில் தாவுலிகிரி சாந்தி ஸ்தூபியில் உள்ளன.
- தில்லி இராசீவ் காந்தி சமாதியில் வைக்கப்பட்டுள்ள பெரிய தாமரை படிமம் ரகுநாத் மகபத்ர செய்த ஒன்று.
- லடாக்கில் 20 அடி உயரத்தில் புத்தர் சிலைகள், அரியானாவில் 15 அடி உயரத்தில் முக்தேசுவர் வாயில் ஆகியனவும் இவருடைய படைப்புகள் ஆகும்.
Remove ads
விருதுகள், சிறப்புகள்
- பத்மசிறீ விருது (1976)
- பத்ம பூசண் விருது (2001)
- பத்ம விபூசண் விருது (2013)
- 1963 முதல் ஒரிசா மாநில அரசின் கைவினைத் துறையின் பயிற்சி மையத்தில் ஆலோசகராகவும் மேற்பார்வையாளராகவும் செயல்படுகிறார்.
- 2000 ஆம் ஆண்டில் இந்திய அரசின் அயலகத் துறையால் ரகுநாத் மகபத்ர இந்தியப் பண்பாட்டு உறவுக் கவுன்சிலில் உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.
மேற்கோள்கள்
சான்றாவணம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads