ரகுபதி ராகவ ராஜாராம் (பாடல்)
"இரகுபதி ராகவ ராஜாராம்" "ஃபதீத பாவன சீதாராம்" "கங்கா துளசி சாலிஹ்ராம்" "பத்ர க்ரீஸ்வர சீதாராம்" "பக From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரகுபதி ராகவ ராஜாராம் (Raghupati Raghav Raja Ram, தேவநாகிரி: रघुपति राघव राजाराम) புகழ்பெற்ற இந்து பக்தி பாடல் ஆகும். இப்பாடல் சில நேரங்களில் 'ராம் துன்' என்று அழைக்கப்படுகிறது) மகாத்மா காந்தி இந்த பாடலை அதிகம் பயன்படுத்தியதால் புகழடைந்தது.[1]
பொதுவாக அனைவரும் பாடும் இந்த பாடலின் பதிப்புக்கு, விஷ்ணு திகம்பர் பாலசுக்கர் இசையமைத்தார்.[2] காந்தியோடு அவருடைய ஆதரவாளர்கள் 241 மைல் தண்டி யாத்திரைக்குச் சென்றபோது இந்த பாடலைப் பாடியவாறு சென்றனர்.[3]

Remove ads
பண்பாட்டில்
இந்தப் பாடல் பல திரைப்படப் பாடல்களில் இடம்பெற்றுள்ளது. 'பாரத் மிலாப்' (1942), 'ஜக்ரிதி' (1954), 'பூரப் அவுர் பச்சிம்' (1970) மற்றும் 'குச் குச் ஹோத்தா ஹை' (1998) படங்களில் வரும் பாடல்களில் இடம் பெற்றுள்ளது. கன்னடப் படம் 'காந்தி நகரா' (1998) மற்றும் 'காந்தி' (1982) படங்களிலும் இடம்பெற்றுள்ளது. இது 1977 இல் தயாரிக்கப்பட்ட ஒரு தமிழ் திரைப்படத்தின் தலைப்பாகவும் இருந்தது. ரகுபதி ராகவ ராஜா ராம் பாடல் பல முன்னணிப் பாடகர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. பீட் சீகர் தனது "ஸ்ட்ரேஞ்சர்ஸ் அண்ட் கசின்ஸ்" (1964) ஆல்பத்தில் இந்தப் பாடலையும் சேர்த்தார். இந்தப் பாடல் 2006 பாலிவுட் திரைப்படமான 'லகே ரஹோ முன்னா பாய்' படத்தில் ஒரு முக்கிய அம்சமாகும். மேலும் இது 'காந்தி, மை பாதர்' படத்தில் இடம்பெற்றது.
Remove ads
ஒலிபெயர்ப்பு
ரகுபதி ராகவ ராஜாராம் ! பதீத பாவன சீதாராம் !
சீதாராம் ஜெய சீதாராம் ! பஜ ப்யாரே து சீதாராம் !
ஈஸ்வர அல்லா தேரே நாம் ! சப்கோ சன்மதி தே பகவான் !
ரகுபதி ராகவ ராஜா ராம் ! பதீத பாவன சீதாராம் !
மொழிபெயர்ப்பு
ஓ ராமா, ரகு வம்சமே, வீழ்ந்தவரை உயர்த்தும் உன்னதரே,
உன்னையும் உன்னுடைய அன்புக்குரிய பத்தினியான சீதாவையும் வழிபட வேண்டும்.
ஈஸ்வரா, அல்லா மற்றும் அனைத்து கடவுள்களின் பெயர்களும் ஒரே உயர்ந்த சக்தியை தான் குறிக்கின்றன.
ஆண்டவரே, தயவுசெய்து அனைவருக்கும் சமாதானத்தையும் சகோதரதுவத்தையும் கொடுங்கள்.
நாங்கள் அனைவரும் உங்கள் பிள்ளைகளே.
மனிதகுலத்தின் இந்த நித்திய ஞானம் தொடர கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் படிக்க
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads