இரசம் (உணவு)
தென்னிந்திய திரவ வடிவ உணவு வகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரசம் (ⓘ) என்பது உணவாக தயாரித்து உண்ணப்படும் திரவமாகும்.
'வேதிப்பொருட்கள்' எனப் பொருள்படும் 'ரசம்' (மசாலா பொருட்கள்) என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து இதற்கு தமிழகத்தில் 'ரசம்' என்ற பெயர் வந்தது. உணவு உண்பதற்குச் சற்று முன்னரோ உணவுடனோ அல்லது உணவின் பின்னரோ ரசம் உட்கொள்ளப்படும். உணவின் செரிமானத்தை அதிகரிப்பதற்கும் வயிற்றில் ஏற்படும் வாயுத் தொல்லைகளிலிருந்து நிவாரணம் பெறுவதற்கும் பொதுவாக உணவில் ரசம் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. புளியை நீரில் கரைத்து, உப்பு மற்றும் மசாலாப் பொடிகள் சேர்த்து, கொதிக்க வைத்த உணவுப்பொருள் 'புளி ரசம்' எனப்படும். இது தமிழகத்தில் மிகவும் பிரபலமாகும். பொதுவாக தமிழர்களின் மதிய உணவு என்பது சோற்றுடன் முதலில் குழம்பு, பிறகு ரசம், கடைசியில் தயிர் என்ற வரிசையில் பரிமாறப்படும்.

Remove ads
இரசத்தின் வகைகள்
- மிளகு இரசம்
- சீரக ரசம்
- பருப்பு இரசம்
- பருப்புருண்டை இரசம்
- மைசூர் ரசம் (தேங்காய் அல்லது கொப்பரை அறைத்து)
- திப்பிலி இரசம்
- எலுமிச்சை இரசம்
- அண்ணச்சிப் பழ புளி இரசம்
- தக்காளி இரசம் (குரைவான் புளியுடன்)
- வேப்பம்பூ இரசம்
- அள்ளி பருப்பு ரசம் (முக்கால் அளவு வெந்த பருப்புடன்)
மிளகுத்தண்ணீர்
மிளகுத்தண்ணீர் என்பது மிளகுப் பொடி அதிகம் சேர்த்து செய்யப்படும் ஒரு வகை ரசமாகும்.
மிளகுத்தண்ணீர் என்கிற சொல் வட்டார வழக்கில் மொளுகுத்தண்ணி என்றாகி பின்னர் அதுவே தமிழகத்தில் இருந்த ஆங்கிலேயர்களால் 'முளிகாடவ்னி' என அறியப்பட்டு Mulligatawny எனகிற எழுத்தமைப்புடன் ஹோப்சன் ஜாப்சன் (Hobson Jobson) முதலான ஆங்கில அகராதிகளில் இடம்பிடித்து ஆங்கிலச் சொல்லானது.[1][2]
இதனைத் தயாரிப்பதிலும் பல வேறுபாடுகள் உள்ளன.[3] மேற்கு நாடுகளில் இது கோழி அல்லது இறைச்சித் துண்டுகள் போடப்பட்டு தயாரிக்கப்படுகிறது. சில வழக்கங்களில் இது அரிசி மாவு கொண்டு அடர்த்தி கூட்டப்படுகின்றது.
Remove ads
காட்சிக்கூடம்
- கிராமத்து உணவில் ரசம்
- தென்னிந்திய உணவின் ஒரு அங்கமாக ரசம் (கோப்பையில்)
- உணவக மேஜையில் ரசம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads