ரசா நூலகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராம்பூர் ரசா நூலகம் என்பது இந்திய, இசுலாமிய பாரம்பரியங்களைப் பற்றிய நூல்களைக் கொண்ட நூலகம். இது உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் நகரில் உள்ளது. தற்போது, இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு அரிய ஆவணங்களும், ஓவியங்களும் உள்ளன. அரேபிய பாரசீக மொழிகளில் எழுதப்பட்ட நூல்களும் உள்ளன. இவை தவிர, சமசுகிருதம், இந்தி, உருது, பஷ்து, தமிழ், துருக்கிய மொழிகளில் எழுதப்பட்ட நூல்களும் உள்ளன.[1][2][3]

Remove ads
வரலாறு
நவாப் ஃபைசுல்லா கான் என்ற அரசர், ராம்பூரை ஆட்சி செய்தார். இவரிடம் இருந்த நூல்களைக் கொண்டு நூலகம் ஒன்றை அமைத்தார். பின்னர் ஆண்ட மன்னர்களும், தங்களுடைய ஆவணங்களையும், நூல்களையும் சேகரித்தனர். நவாப் முகமது சயீத் கான் என்ற அரசர், நூலகத்தைப் புதுப்பித்து, அதை நிர்வகிக்க ஆட்களையும் நிறுவினார்.
தற்போதைய நிலை
ராம்பூர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது, இந்த நூலகத்தை அறக்கட்டளையினர் நிர்வகித்தனர். பின்னர், இந்திய அரசு பராமரிக்கத் தொடங்கியது.
சான்றுகள்
இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads