ரஞ்சித் சியம்பலாபிட்டிய
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பசநாயக்க ரலலாகே ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Basnayaka Ralalage Ranjith Siyambalapitiya, பிறப்பு: 1 மே 1961) இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக உள்ளார். இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினரான இவர் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் தொலைதொடர்பு, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராகப் பதவியில் இருந்தார்.
Remove ads
ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்
கேகாலையில் பிறந்த ரஞ்சித் ருவான்வெலை ஆரம்பப் பாடசாலையிலும், பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1981 இல் இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் சென்று வணிக முகாமைத்துவத்தில் பட்டம் பெற்றார். வென்டலவத்தை, ருவன்வெலையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.
அரசியல்
இவர் 2000, 2001, 2004, 2010, 2015, 2019 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் கேகாலை மாவட்டப் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். தொலைதொடர்பு, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராகப் பதவியில் இருந்தார். தொடர்ந்து இவர் 2015 செப்டம்பர் 4 அன்று எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]
உசாத்துணை
- ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads