ரமாகாந்த் தேசாய்
இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரமாகாந்த் பிகாஜி தேசாய் (Ramakant Bhikaji Desai, சூன் 20. 1939, இறப்பு ஏப்ரல் 28. 1998). ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 28 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 150 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1958 இலிருந்து 1968 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.
ரஞ்சிக் கோப்பையில் தனது முதல் ஆண்டில், இவர் 7 போட்டிகளில் 11.10 சராசரியாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.[1] இது இன்றும் மும்பை அணியின் சதனைப் பட்டியலில் உள்ளது. மேலும், சௌராஷ்டிரா அணிக்கு எதிராக 10 ஓட்டங்களும் 5 விக்கெட்டுகளும் 28 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளும் அடங்கும்.[2] 1960–61ல் ரஞ்க் கோப்பை இறுதிப் போட்டியில், இராஜஸ்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மும்பை அணி பெற்ற வெற்றியில் இவர் 46 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளையும் 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.[3]
Remove ads
இறப்பு
தேசாய் 1996 முதல் 1997 வரை தேர்வுக்குழுத் தலைவராக இருந்தார். இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அந்தப் பதவியை விட்டு விலகினார். இதய செயலிலப்பால் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு இறந்தார்.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads