ரமேஷ் விநாயகம்

இந்திய இசையமைப்பாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ரமேஷ் விநாயகம் (பிறப்பு ஜூலை 7,1963) ஓர் இந்திய இசையமைப்பாளர், அமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இசைத் தயாரிப்பாளர்.

விரைவான உண்மைகள் ரமேஷ் விநாயகம், இயற்பெயர் ...
Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

தமிழ் பெற்றோர்களான விநாயகம் மற்றும் வல்லிக்கு ரமேஷ் விநாயகம் ராமசுப்பிரமணியம் (ராம்சுப்பு) என்ற பெயரில் பிறந்தார்.[1] ஏ. எம். ஜெயின் கல்லூரியில் பயின்ற இவர் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பிரிவில் பட்டம் பெற்றார். ருக்மிணி ரமணி என்பவரிடமிருந்து கர்நாடக இசை, ஜேக்கப் ஜானிடம் மேற்கத்திய பாரம்பரிய இசை கற்ற இவர், லண்டனில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் பட்டயப் படிப்பை முடித்தார்.[1] சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ. எம். ஜெயின் கல்லூரியில் நுண்கலைச் செயலாளராகப் பணியாற்றினார். இவர் தனது கல்லூரியை முடிக்கும் நேரத்தில், தனது கவிஞர்-நண்பர் நாராயணனுடன் இணைந்து பல்வேறு சூழ்நிலைகளுக்கு பல பாடல்களை இயற்றியிருந்தார். இவர் தனது தந்தையின் நண்பரின் நிறுவனத்தில் ஒரு மேலாளராகச் சில காலம் பணி செய்தார். இசையிலேயே தனது பணி இருக்க வேண்டும் என்று என்னினார்.[2] எஸ். பி. பாலாசுப்பிரமணியம் இவர்களை ஒரு நண்பர் மூலமாக சந்தித்த பிறகு முழு நேர இசைப் பயணத்தை தொடர முடிவு செய்தார்.[2]

Remove ads

இராகங்கள்

இதுவரை பத்து இராகங்களை உருவாக்கியுள்ளார். பிரதிதவனி, மத்ய மோகனம், துவி நிரோத்திரா இராகங்கள் இவர் உருவாக்கியவை.[3] பேத்தோவன் அமைத்த ஃபர் எலிசு என்ற இசையைச் சார்ந்து பேத்தோவனப்பிரியா என்னும் இராகத்தையும் உருவாக்கியுள்ளார்.[4][5]

மற்ற வேலைகள்

ரமேஷ் விநாயகம் பல ஆண்டுகளாக "கமக பெட்டி" என்று அழைக்கப்படும் ஒரு வேலையில் பணியாற்றி வருகிறார். இது இந்திய பாரம்பரிய இசை ஒரு வகையான அலங்காரமான காமகத்தை பார்வைக்கு பிரதிநிதித்துவப்படுத்தவும் குறிக்கவும் ஒரு வழியாகும். கமகங்களின் குறிப்பு, பொதுவாக இந்திய இசை அமைப்பில் காணப்படவில்லை. மேலும் விநாயகத்தின் முயற்சி கர்நாடக இசையில் ஒரு திருப்புமுனையாகவும் புரட்சியாகவும் பார்க்கப்பட்டது.[6][7] இந்த கமகப்பெட்டி குறியீடுகளுக்கு காப்புரிமம் பெற்றுள்ளார்.[8]

Remove ads

இசையமைப்பு வரலாறு

இசையமைப்பாளராக

திரைப்படங்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
தொலைக்காட்சி
  • சிம்ரன் திரை (ஜெயா தொலைக்காட்சி)
  • கிரேசியின் விடாது சிரிப்பு (ஜெயா தொலைக்காட்சி)
  • ரோஜா கூட்டம் (விஜய் தொலைக்காட்சி)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads