ரவிதாசன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரவிதாசன், ஆதித்த கரிகாலனைக் கொன்ற துரோகி என்று உடையார்குடிக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ரவிதாசர், ரவிதாசன் (கதைமாந்தர்) ஆகியவை மற்றவர்களை குறிக்கின்றன.
ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள்
ரவிதாசன், சோமன், பரமேஸ்வரன் ஆகிய மூவரும் சகோதரர்கள். இவர்களே வீரபாண்டியனை ஆதித்த கரிகாலன் கொன்றமைக்காக பழிவாங்கும் பொருட்டு திட்டமிட்டு ஆதித்த கரிகாலனைக் கொன்றார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் மூவருடன் இவர்களின் சொந்தங்கள் அனைவரையும் நாட்டினை விட்டு இராஜராஜ சோழன் வெளியேற்றியதாக கல்வெட்டில் குறிப்புள்ளது. [1]
கொலைக்கான தண்டனை
ஆதித்த கரிகானைக் கொன்றவர்களை உத்தம சோழன் காலத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை. இராஜராஜன் அரசுரிமையை ஏற்ற பின்பு கொலைகாரர்களின் சொத்துகளும், உறவினர்களின் சொத்துகளும் விற்பனை செய்யப்பட்டு, கருவூலத்தில் சேர்க்கப்பட்டன. கொலை செய்தவர்களை இராஜராஜன் நாடுகடத்தினான் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
நூல்கள்
ரவிதாசனை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads