ராக்கம்மாள் (கதைமாந்தர்)

பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ராக்கம்மாள், கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தின் கதாப்பாத்திரம். இவள் வீரபாண்டியனின் மரணத்திற்காகச் சுந்தர சோழரின் குடும்பத்தைப் பழிவாங்க முயற்சிக்கும் பாண்டிய ஆபத்துதவிகளில் ஒருத்தி. அம்முயற்சியில் பழுவூர் இளையராணி நந்தினி தேவிக்கு உதவுகிறாள்.

விரைவான உண்மைகள் ராக்கம்மாள், முதல் தோற்றம் ...
Remove ads

கதாப்பாத்திரத்தின் இயல்பு

படகோட்டி முருகைய்யனின் மனைவி ராக்கம்மாள் ஆவாள். முருகைய்யனின் தங்கைபூங்குழலி இவளை பணத்தாசை பிடித்தவளாக கருதுகிறாள். பழுவூர் இளையராணி நந்தினி தேவியின் ஆட்கள் இருவர் ஈழத்திற்கு செல்ல வருகிறார்கள். அவர்கள் நிறைய பணம் கொடுப்பதாக கூறியதால் தன் கணவன் முருகைய்யனை ஈழத்திற்கு படகோட்டிச் செல்லுமாறு கூறுகிறாள். அவர்கள் சென்றதும் வந்தியத்தேவனும், வைத்தியர் மகன் பினாகபாணியும் ஈழத்திற்கு செல்வதற்காக வருகிறார்கள். வந்தியத்தேவனைப் பூங்குழலி மறைத்துவைக்கும் இடிந்த மண்டபத்தினைப் பழுவூர் காவலர்களுக்கு காட்டிக் கொடுக்கின்றாள் ராக்கம்மாள்.

இளவரசர் அருள்மொழிவர்மனையும், வந்தியத்தேவனையும் கோடிக்கரைக்கு அழைத்துவரும் பூங்குழலி, நந்தினியும், அண்ணி ராக்கம்மாளும் பேசுவதைக் கேட்கும் போதுதான், ராக்கம்மாளும் பாண்டிய ஆபத்துதவியாள் என்பதை அறிகிறாள். மேலும் அவளுக்கு இடிந்த மண்டபம் இருக்கும் இடமும் பூங்கொடியைப் போல சதுப்புக் காடுகளும் தெரிந்திருக்கின்றன என்பது வியப்பாக இருக்கிறது. மேலும் அவள் நந்தினியைப் போலவே மந்திரவாதி ரவிதாசனையும் அறிந்து வைத்திருக்கின்றாள்.

Remove ads

நூல்கள்

ராக்கம்மாளைக் கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads