ராஜபாய் கடிகார கோபுரம்

From Wikipedia, the free encyclopedia

ராஜபாய் கடிகார கோபுரம்
Remove ads

ராஜபாய் கடிகார கோபுரம் (Rajabai Clock Tower) என்பது தெற்கு மும்பை இந்தியாவில் ஒரு கடிகார கோபுரமாகும். இது மும்பை பல்கலைக்கழகத்தின் கோட்டை வளாகத்தின் எல்லையில் அமைந்துள்ளது. இது 85 மீ (280 அடி அல்லது 25 மாடிகள்) உயரத்தில் நிற்கிறது. இந்த கோபுரம் மும்பையின் விக்டோரியன் மற்றும் ஆர்ட் டெகோ குழுமத்தின் ஒரு பகுதியாகும். இது 2018 இல் உலகப் பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. [1]

விரைவான உண்மைகள் ராஜபாய் கடிகார கோபுரம், பொதுவான தகவல்கள் ...
Remove ads

வரலாறு

இந்த கோபுரத்தை சர் ஜார்ஜ் கில்பர்ட் ஸ்காட் என்ற ஆங்கிலக் கட்டிடக் கலைஞர் லண்டனில் உள்ள பிக் பென் போன்று வடிவமைத்தார் . [2] இதற்கு மார்ச் 1, 1869 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் இதன் கட்டுமானம் 1878 நவம்பரில் நிறைவடைந்தது. கட்டுமானத்திற்கான மொத்த செலவு ₹550,000 ஆக இருந்தது. அக்காலத்தில் இது ஒரு பெரிய தொகையாகும். மொத்த கட்டுமான செலவில் ஒரு பகுதியை மும்பை பங்குச் சந்தையை நிறுவிய ஒரு வளமான தரகர் பிரேம்சந்த் ராய்சந்த் ₹200,000 நன்கொடையாக வழங்கினார்.

இவரது தாயார் கண்பார்வையற்றவராக இருந்தார். சமண மதத்தின் தீவிர பின்பற்றுபவராக, அவர் மாலை உணவுக்கு முன் தனது இரவு உணவை உட்கொள்ள வேண்டியிருந்தது. யாருடைய உதவியும் இல்லாமல் நேரத்தை அறிய கோபுரத்தின் மாலை நேர மணி அவருக்கு உதவியது என்று கதை கூறுகிறது. அடிக்கடி தற்கொலைக்கு முயன்றவர்களுக்கான ஒரு இடமாக மாறியதால் இந்த கோபுரம் பொதுமக்களுக்கு மூடப்பட்டது.

Remove ads

அமைப்பு

இந்த கோபுரம் வெனிசு மற்றும் கோதிக் பாணிகளின் இணைப்பில் கட்டப்பட்டது. இது உள்நாட்டில் கிடைக்கக்கூடிய பஃப் வண்ண குர்லா கல்லில் இருந்து கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரம் நகரத்தில் சிறந்த வண்ணக் கண்ணாடி சன்னல்களில் ஒன்றாகும் [3] .

மணி

Thumb
ராஜபாய் கடிகார கோபுரம், இரவில் பிரகாசமாக எரிகிறது.

பிரித்தானிய இராச்சியத்தின் போது, பிரித்தானிய நாட்டுப்பண்ணான " ஹோம்! ஸ்வீட் ஹோம்!" என்ற பாடலை மொத்தம் பதினாறு இசைகளில் ஒலிக்கப்பட்டது. இது ஒரு நாளைக்கு நான்கு முறை மாற்றப்பட்டது. இது தற்போது ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு இசை மட்டுமே ஒலிக்கிறது .

மறுசீரமைப்பு

அக்டோபர் 2013 முதல் 2015 மே 11 வரை, கோபுரம் அனிதா கார்வேர் (ஹெரிடேஜ் சொசைட்டி), முனைவர் ராஜன் வேலுகர் (துணைவேந்தர்; மும்பை பல்கலைக்கழகம்) மற்றும் நடராசன் சந்திரசேகரன் (தலைமை நிர்வாக அதிகாரி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) ஆகியவற்றின் கண்காணிப்பின் கீழ் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டது. புதுப்பித்தலுக்குப் பிறகு இது மார்ச் 2015 இல் மீண்டும் திறக்கப்பட்டது [4]

மறுசீரமைப்பு முயற்சிகள் யுனெஸ்கோவால் 2018 ஆம் ஆண்டில் நூலகமும், கடிகார கோபுரமும் கலாச்சார பாரம்பரிய பாதுகாப்புக்கான யுனெஸ்கோ ஆசிய-பசிபிக் விருதைப் பெற்றபோது அங்கீகரிக்கப்பட்டது. [5]

Remove ads

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads