ராதா ஜெயலட்சுமி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராதா ஜெயலட்சுமி எனப் பிரபலமாக அழைக்கப்படும் ராதா மற்றும் ஜெயலட்சுமி (இறப்பு: மே 26, 2014) இரட்டையர் இந்திய கருநாடக இசைப் பாடகர்களும் திரைப்படப் பின்னணிப் பாடகிகளும், இசை ஆசிரியைகளும் ஆவர். இவ்விரட்டையர்களில் ஜெயலட்சுமியே பெரும்பாலும் பின்னணிக் குரல் கொடுப்பவர். ஆனாலும் திரையுலகில் இவர் ராதா ஜெயலட்சுமி என்றே அழைக்கப்பட்டார். ராதா இவரது உடன்பிறவா சகோதரி ஆவார். 1950களில் இருந்து இவர்கள் மேடைக் கச்சேரிகளில் இணைந்தே பாடுவார்கள்.[1]

Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
ராதா, ஜெயலட்சுமி ஆகியோர் ஜி. என். பாலசுப்பிரமணியத்தின் பள்ளியில் கருநாடக இசை பயின்றார்கள்.[2] 1940கள் முதல் ஜெயலட்சுமி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் பின்னணிப் பாடல்களைப் பாடி வந்தார். 50களில் கே. வி. மகாதேவன், ஜி. ராமநாதன், சுந்தரம் பாலச்சந்தர், போன்ற பல பிரபலமான இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்தார்.
குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் தெய்வம் திரைப்படத்தில் "திருச்செந்தூரில் போர் புரிந்து" என்ற பாடலை ராதா பாடியிருந்தார். இதுவே இவர் பாடிய ஒரேயொரு திரையிசைப் பாடல் எனக் கருதப்படுகிறது.
இவர்களிடம் கருநாடக இசை பயின்றவர்களில் பிரியா சகோதரிகள் குறிப்பிடத்தக்கவர்கள்.[3]
Remove ads
விருதுகள்
- சங்கீத நாடக அகாதமி விருது, 1981. வழங்கியது: சங்கீத நாடக அகாதமி[4]
இறப்பு
ராதா ஜெயலட்சுமி இரட்டையர்களில் ஜெயலட்சுமி 2014 மே 26 இல் தனது 82வது அகவையில் சென்னையில் காலமானார்.[5][6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads