ராம்நகர் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராம்நகர் கோட்டை என்னும் கோட்டை, இந்தியாவிலுள்ள வாரணாசியின் ராம்நகர் பகுதியில் உள்ளது. இது கங்கை ஆற்றின் கிழக்குக் கரையில், துளசி காட் என்னும் பகுதிக்கு எதிர்ப்புறமாக அமைந்துள்ளது. இந்த கோட்டையில் தற்போதைய அரசரான அனந்த் நாராயண் சிங் வசிக்கிறார். இவர் வாரணாசியின் அரசர் ஆவார். [1][2] இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் பனாரசு இந்து பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

Remove ads
வரலாறு
இதை வாரணாசியின் அரசரான பல்வந்து சிங், 1750ஆம் ஆண்டில் கட்டினார்.[3]
அருங்காட்சியம்
இங்குள்ள அருங்காட்சியகத்துக்கு சரஸ்வதி பவன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் கருத்துக் கேட்பு கூடமாக செயல்பட்டது. இங்கு பல்லக்கு, யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட பொருட்கள், வாள், பழைய காலத் துப்பாக்கிகள் உள்ளிட்ட பலவும் உள்ளன.[2][4][5]
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads