ராய்ச்சூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராய்ச்சூர் என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் அமைந்துள்ள நகராட்சி. இது ராய்ச்சூர் மாவட்டத்தின் நிர்வாக மையமும் தலைநகரமும் ஆகும். இது பெங்களூருவில் இருந்து 409 கி.மீ தொலைவில் உள்ளது.
Remove ads
வரலாறு

ராய்ச்சூர் அரசராட்சிக் காலத்தில் பாமினியர்கள், விஜயநகர ஆட்சிகளின் கீழ் இருந்துள்ளது. இங்குள்ள ராய்ச்சூர் கோட்டை புகழ் பெற்றது?[1]. பாரசீகம், அரபி, கன்னடம், பிராகிருதம், சமசுகிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் இங்குள்ளன. மௌரியப் பேரரசு முதல் இசுலாமியர் ஆட்சிக் காலம் வரையிலுமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

தட்பவெப்பம்
கன்னடம் முதன்மை மொழியாக உள்ளது. தெலுங்கு, உருது, இந்தி மொழி பேசுவோரும் உள்ளனர். வேளாண்மை முக்கியத் தொழிலாக விளங்குகிறது. அரிசி, பருத்தி ஆகியனவற்றினை அதிகளவில் விளைவிக்கின்றனர்.
Remove ads
போக்குவரத்து
பெங்களூரு, மும்பை, ஐதராபாத் நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளன. உள்ளூர் பயணத்திற்கு அதிகளவில் ஆட்டோ ரிக்சாக்கள் உள்ளன. பெங்களூரு, மும்பை, தில்லி, சென்னை, ஐதராபாத், அகமதாபாத், திருவனந்தபுரம், கன்னியாகுமரி (பேரூராட்சி), புனே, போப்பால் ஆக்ரா. ஆகிய நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளன.
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads