ராஷ்டிரிய சேவிகா சமிதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராஷ்டிரிய சேவிகா சமிதி அல்லது தேசிய மகளிர் விருப்பார்வத் தொண்டர் சங்கம் (Rashtra Sevika Samiti) (National Women Volunteers Committee), ஆடவர் அமைப்பான ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் மகளிர் பிரிவாகும்.[1] இவ்வமைப்பின் நிறுவனத்தலைவர் இலக்குமிபாய் கேல்கர் . தற்போதைய தலைவர் வி. சாந்த குமாரி , பொதுச்செயலர் சீதா ஆனந்தம் ஆவார்கள். [2] ராஷ்டிரிய சேவிகா சமிதி அமைப்பை வார்தாவில் 25 அக்டோபர் 1936ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட்து.[3]இவ்வமைப்பின் குறிக்கோள், இந்துப் பெண்களை ஒருங்கிணைத்து, இந்துத்துவா கொள்கைகள் மூலம் இந்து கலாசாரத்தையும் மரபைகளையும் மற்றும் நாட்டுப் பற்றை வளர்க்கவுமே.
Remove ads
நடவடிக்கைகள்
இந்து மகளிரை உறுப்பினர்களாகக் கொண்ட ராஷ்டிரிய சேவிகா சமதி, இந்திய கலாசாரத்தையும் மரபுகளையும் பேணிக் காக்க செயல்படுகிறது. இதன் உறுப்பினர்கள் சமுக கலாச்சார நடவடிக்கைகளில் ஆர்வமுடன் பங்கெடுக்கின்றனர். மகளிரிடையே சமுக விழிப்புணர்வை வளர்ப்பதுடன், நாட்டுப் பற்றையும் வளர்க்கிறது. இதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முகாம்களை நடத்துகிறது.[3][4][5] ராஷ்டிரிய சேவிகா சமதி, தன் உறுப்பினர்களுக்கு யோகா, இசை, தேசிய மற்றும் நாட்டுப் பற்றை வளர்க்கும் பாடல்களில் பயிற்சி அளிப்பதுடன் தற்காப்புப் போர்க் கலைகளையும், நாட்டில் செயல்படும் 5215 கிளைகளிலும் (Shakhas) பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும் 875 கிளைகளில் அன்றாடம் தற்காப்புப் போர்க் கலையை கற்றுத் தருகிறது.[2]தற்போது இவ்வமைப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திலிருந்து[6] பத்து இலட்சமாக உயர்ந்துள்ளது. [7] ராஷ்டிரிய சேவிகா சமிதியின் கிளைகள் பத்து வெளிநாடுகளில், இந்து சேவிகா சமிதி எனும் பெயரில் செயல்படுகிறது.[8]
இந்தியா முழுவதும், சமயம், சாதி, இனம் பாராது ஏழை மகளிர்க்கு தொண்டு புரிய 475 சேவை மையங்கள் கொண்டுள்ளது. இச்சேவை மையங்கள் மூலம் பள்ளிகள், நூலகங்கள், ஆதரவற்றோர் மையங்கள் மற்றும் கணிபொறி பயிற்சி நிறுவனங்களை செயல்படுகிறது.[3]
ராஷ்டிரிய சேவிக சமதி தன் உறுப்பினர்களுக்கு மூன்று முக்கிய கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்துகிறது.
- மாத்துருத்துவம் - உலகளாவிய தாய்மைப் பண்பை பேனுதல்
- கர்த்துருத்தவம் - சமூக நடவடிக்கைகளில் திறமையாக பங்கேற்றல்
- நேத்துருத்துவம் - தலைமைப்பண்பை வளர்த்தல்
சமுகத்தில் அனைத்து இந்து மகளிரும் தங்கள் சமூகத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வரும் ஆற்றல் படைத்தவர்கள் என இவ்வமைப்பு நம்புகிறது.[3]
Remove ads
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads