ரா. ராதாகிருஷ்ணன் (அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

ரா.ராதாகிருட்டிணன் (R Radhakrishnan) புதுச்சேரி ஒன்றியப் பகுதியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் 1971 ஆம் ஆண்டு சூன் மாதம் 9 ஆம் தேதி பிறந்தார். இந்தியப் பாராளுமன்றத்தின் உறுப்பினராகவும், 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை புதுச்சேரி சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் இருந்துள்ளார். அகில இந்திய நமது ராச்சியம் காங்கிரசு கட்சி உறுப்பினரான இவர் 2014 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார்[1].

விரைவான உண்மைகள் ஆர். ராதாகிருட்டிணன்R Radhakrishnan, நாடாளுமன்றம் ...
Remove ads

குடும்பமும் கல்வியும்

ஆர் ராதாகிருட்டிணன் அரசியல் பரம்பரை கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் புதுச்சேரி சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரான ஆர்.ராமநாதனின் மூத்த மகன் ஆவார். . ஆர்.ராதாகிருட்டிணன் தனது உயர்நிலைப் பள்ளியை கடலூரிலுள்ள ஏ.ஆர்.எல்.எம் மெட்ரிக்குலேசன் பள்ளியிலும் மேல்நிலைக் கல்வியியை கேம்பியன் ஆங்கிலோ-இந்திய மேல்நிலைப்பள்ளியிலும் முடித்தார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் வணிகத்தில் பட்டம் பெற்றார். கோயம்புத்தூரில் உள்ள பி.எசு.கி மேலாண்மை நிறுவனத்தில் முதுநிலை வணிக நிர்வாகம் (எம்.பி.ஏ) பெற்றார். அந்நிறுவனம் இவரை அதன் முன்னாள் மாணவர்களில் சிறந்த ஒருவராகக் கருதுகிறது [2].

Remove ads

அரசியல் வாழ்க்கை

ஆர்.ராதாகிருட்டிணன் 2001 இல் குருவிநாதன் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டிலும் இரண்டு முறை புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2001-2006 வரை புதுச்சேரி சேரி குடிசை மாற்று வாரியத்தின் தலைவராக இருந்தார் [3]. மேலும் இவர் புதுச்சேரி சட்டமன்றத்தின் சபாநாயகராக 2006 முதல் 2011 வரை பணியாற்றினார் [4].

அகில இந்திய நமது ராச்சியம் கட்சி உறுப்பினரான இவர் பொதுத் தேர்தலில் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் வி. நாராயணசாமியை 60,854 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்து வெற்றிபெற்றார் [1].

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads