ரிச்சர்ட் நியூட்ரா

From Wikipedia, the free encyclopedia

ரிச்சர்ட் நியூட்ரா
Remove ads

ரிச்சர்ட் ஜோசெஃப் நியூட்ரா என்னும் முழுப்பெயர் கொண்ட ரிச்சர்ட் நியூட்ரா (ஏப்ரில் 8, 1892 – ஏப்ரில் 16, 1970), நவீன கட்டிடக்கலையின் முதன்மையான கட்டிடக்கலைஞர்களுள் ஒருவர்.

விரைவான உண்மைகள் ரிச்சர்ட் நியூட்ரா, பிறப்பு ...
Thumb
நியூட்ரா வடிவமைத்த கோஃப்மன் வீடு, பாம் ஸ்பிறிங்ஸ், கலிபோர்னியா
Thumb
நியூட்ராவின் மரஉச்சி வீடு

நியூட்ரா ஆஸ்திரியாவிலுள்ள வியன்னா நகரில் 1892 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞரான அடொல்ஃப் லூஸ் (Adolf Loos) என்பவரிடம் படித்தார். இவர் இன்னொரு புகழ் பெற்ற கட்டிடக்கலைஞரான ஓட்டோ வாக்னர் (Otto Wagner) ஆக்கங்களினால் ஈர்க்கப்பட்டார். சிலகாலம், ஜெர்மனியில் எரிக் மண்டல்சொன் (Erich Mendelsohn) என்பவரிடம் பணிபுரிந்த இவர் 1923 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். 1929 இல் அந்நாட்டின் பதிவுப் பிரஜை ஆனார். இவர் பிராங் லாயிட் ரைட்டிடம் குறைந்தளவு காலம் வேலை செய்தபின்னர், இவரது நெருங்கிய நண்பரான ருடோல்ஃப் ஷிண்ட்லர் என்பவரது அழைப்புக்கிணங்கிக் கலிபோர்னியாவில் அவருடன் சேர்ந்து பணி செய்தார். பின்னர் அவரது மனைவியான டையோனே (Dione) எனவருடன் சேர்ந்து தனது சொந்தத் தொழில் தொடங்கினார்.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads