ரிச்சர்ட் பென்சன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ரிச்சர்ட் பென்சன் (1943 நவம்பர் 8--2017 சூன் 22, ) அமெரிக்க நிழற்படக்காரர், அச்சுத் தொழிலாளி, கல்வியாளர், நூலாசிரியர் எனப் பன் முகம் கொண்டவர்.[1]

வாழ்க்கைக்குறிப்புகள்

நியூபோர்ட்டில் பிறந்த ரிச்சர்ட் பென்சனின் தந்தை ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி ஆவார். பிரவுன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்த பென்சன் பாதியிலேயே படிப்பதை நிறுத்திவிட்டுக் கடற்படையில் சேர்ந்தார். நிழற்படக்கலையில் ஆர்வம் ஏற்பட்டு அரிய நிழற்படங்களைப் பிடித்தார். கடிகாரங்கள் நீராவி பொறிகள் போன்றவற்றை உருவாக்கினார்.

30 ஆண்டுகளாக யேல் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் பணியில் இருந்தார். 1996 முதல் 2006 வரை கலைப்பள்ளியில் பணி புரிந்தார். 1990களில் டிசிட்டல் நிழற்படக் கலையில் ஈடுபட்டார்.2008 இல் பிரின்டட் பிக்ச்சர்ஸ் என்ற நூல் எழுதி வெளியிட்டார். 2011இல் இவர் தொகுத்த நிழற்படங்கள் தொகுப்பு வெளிவந்தது.

Remove ads

பெற்ற விருதுகள்

  • 1978 குக்கன்கிம் பெல்லோ
  • தேசிய கலைஞர்கள் விருது
  • 1984 மகர்த்தர் பெல்லோஸ் புரோகிராம்

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads