ரிச்சர்ட் மேடன்

From Wikipedia, the free encyclopedia

ரிச்சர்ட் மேடன்
Remove ads

ரிச்சர்ட் மேடன் (ஆங்கிலம்: Richard Madden) (பிறப்பு: 18 சூன் 1986) என்பவர் இசுக்கொட்லாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் தனது நடிப்பு பயணத்தை இவரது 11 வயதில் ஆரம்பித்தார். பின்னர் இவர் இசுக்கொட்லாந்து ராயல் கன்சர்வேட்டரியில் மாணவராக இருந்தபோது பல மேடையில் நிகழ்ச்சி நடத்தத் தொடங்கினார். இவர் 2007 ஆம் ஆண்டில் ஷேக்ஸ்பியரின் குளோப் நிறுவனத்துடன் இணைந்து ரோமியோ ஜூலியட் என்ற மேடை நாடகத்தில் ரோமியோவாக நடித்தார். அதை தொடர்ந்து 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை கேம் ஆஃப் துரோன்ஸ் என்ற கற்பனை நாடகத் தொடரில் ராப் இசுடார்க் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.

விரைவான உண்மைகள் ரிச்சர்ட் மேடன், பிறப்பு ...

2015 ஆம் ஆண்டு சிண்ட்ரெல்லா என்ற திரைப்படத்திலும், 2019 இல் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ராக்கெட்மேன் என்ற படத்திலும் மற்றும் 1917[1] என்ற காவியப் போர் படத்தில் ஒரு சிப்பாயாகவும் நடித்துள்ளார். இவரை 2020 ஆம் ஆண்டில் டைம் இதழ் உலகின் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக பட்டியலிட்டது.

2021 ஆம் ஆண்டில் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான எட்டெர்னல்சு என்ற படத்தில் 'இக்காரிசு' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[2][3]

Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

ரிச்சர்ட் மேடன் 18 ஜூன் 1986 ஆம் ஆண்டு எல்டர்ஸ்லீ இசுக்கொட்லாந்தில் பிறந்தார். இவரது தாயார் பேட் ஒரு வகுப்பறையில் உதவியாளராக பணிபுரிகின்றார். இவரது தந்தை ரிச்சர்ட் தீ சேவையில் பணிபுரிகின்றார். இவருக்கு இரண்டு சகோதரிகள் உண்டு.[4][5]

திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தலைப்பு ...

தொலைக்காட்சி

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தலைப்பு ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads