ரித்திகா சிங்
இந்திய நடிகை மற்றும் கலப்பு தற்காப்புக் கலைஞர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரித்திகா சிங் (பிறப்பு 16 டிசம்பர் 1994) ஓர் இந்திய நடிகையும் மற்றும் கலப்பு தற்காப்புக் கலைஞரும் ஆவார். பெரும்பாலும் தமிழில் நடித்து வரும் இவர், இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார். 2002 ஆம் ஆண்டு வெளியான டார்ஸான் கி பேட்டி என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.[2] 2009 ஆசிய உள்ளரங்கு போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடிய பிறகு, சூப்பர் ஃபையிட் லீகில் பங்கேற்றார். சுதாகர் கொங்கர பிரசாத் இயக்கத்தில், ஆர்.மாதவனுடன் சேர்ந்து இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.[3] அவரது நடிப்பிற்காக 63 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்பு குறிப்பில் அவரது பெயர் இடம்பெற்றது. அடுத்து தெலுங்கு படமான குரு மற்றும் தமிழ் படமான சிவலங்காவில் நடித்தார். ஹிந்தி (சாலா கதூஸ்), தமிழ் ( இறுதிச் சுற்று ) மற்றும் தெலுங்கு (குரு) ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே கதாபாத்திரத்தில் நடித்து பிலிம்பேர் விருதுகளை மூன்று முறை பெற்றார்.
Remove ads
கலப்பு தற்காப்பு கலை
ஒரு குத்துச்சண்டை வீரராகவும், ஒரு தற்காப்புக் கலைஞராகவும் சிறுவயது முதல், சிங்கின் தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சிப் பெற்றார். 2009 ஆசிய உள்ளரங்கு போட்டிகளில், 52 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமானார். சூப்பர் ஃபையிட் லீகில் பங்கேற்றார்.[4][5]
கலப்பு தற்காப்பு கலை பதிவு
Remove ads
நடிப்பு
2013 யில், சூப்பர் சண்டை லீக்கிற்கான ஒரு விளம்பரத்தில் சுதாகர் கொங்கர பிரசாத் ரித்திகா சிங்கை கண்டார், பின்னர் அவர் தனது இருமொழித் திரைப்படமான சாலா கதூஸ் (2016) யில் ஒரு முன்னணிப் பாத்திரத்தில் ரித்திகாவை நடிக்கவைக்க போட்டியின் தலைவர் ராஜ் குந்திரா மூலமாக தொடர்பு கொண்டார்.[6] பின்னர் மணிகண்டன் இயக்கத்தில் ஆண்டவன் கட்டளை படத்தில் தோன்றினார், அது 2016 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. செப்டம்பர் 2016 வரை. பி. வாசுவின் சிவலிங்கா [7][8] மற்றும் தெலுங்கு படமான குரு ஆகிய இருபடங்களிலும் பணியாற்றிவருகிறார்.[9][10][11]
திரைப்பட வரலாறு
Remove ads
விருதுகள்
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads