ரூப்நகர்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரூப்நகர் (Rupnagar, Punjabi: ਰੂਪਨਗਰ), அல்லது ரோபார் (Ropar,Rupar) இந்திய பஞ்சாப் மாநிலத்தின் ரூப்நகர் மாவட்டத்தின் தலைநகரமும் நகராட்சியும் ஆகும். ரோபார், மொகாலி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை இணைத்து புதியதாக ஐந்தாம் "கோட்டத் தலைமையிடமாக" இந்த நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 11ஆம் நூற்றாண்டில் ஆண்டுவந்த ரோகேசுவர் என்ற மன்னரின் மகனான ரூப்சென் பெயரில் இந்த நகர் உருவாக்கப்பட்டது. சிந்துவெளி நாகரிகக் காலத்தை சேர்ந்த பெரிய தொல்லியல் களங்களில் இதுவும் ஒன்றாகும்.[1]
Remove ads
புவியியல்
30.97°N 76.53°E ஆட்கூறுகளில் ரூப்நகர் அமைந்துள்ளது.[2] நகரத்தின் சராசரி உயரம் 260 மீட்டர்கள் (853 அடி) ஆகும். சத்லஜ் ஆற்றின் கரையில் இந்நகரம் அமைந்துள்ளது. ஆற்றின் எதிர்கரையில் சிவாலிக் மலைகளின் அடிவாரம் உள்ளது.
அமைவிடம்
ரூப்நகர் சண்டிகரிலிருந்து வடமேற்கில் கிட்டத்தட்ட 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மிக அண்மையில் உள்ள வானூர்தி நிலையம் இதுவே ஆகும். இதன் எல்லைகளாக வடக்கில் இமாச்சலப் பிரதேசமும் மேற்கில் சாகித் பகத் சிங் நகர் மாவட்டமும் (முன்பு நவன்சகர் மாவட்டம் எனப்பட்டது) உள்ளன. cities in ரோபார் மாவட்டத்திலுள்ள பெரிய நகரங்களாக மொரிந்தா, குரளி, நங்கல், அனந்த்பூர் சாஹிப், சம்கவுர் சாகிப் , அவேலி காலன் உள்ளன. முன்பு மொகாலி நகரம் ரோபார் மாவட்டத்தின் அங்கமாக இருந்தது; 2006இல் தான் தனி மாவட்டமாகப் பிரிந்தது. நங்கலில் உள்ள பக்ரா அணை அடுத்துள்ள இமாச்சலப் பிரதேசத்தினுடன் எல்லை கொண்டுள்ளது. குருத்வாரா அர்கோவிந்த்சர் சாகிப் உள்ள தாதி சிற்றூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் முக்கியமான இடமாகும்.
ரோபாரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களாகவும் வழிபாட்டுத் தலங்களாகவும் பாதா சாகிப், டிப்பி சாகிப், அனந்த்பூர் சாகிப், சதாபரத் சாகிப் சீக்கிய கோயில்கள் உள்ளன.
Remove ads
தொல்லியல் அருங்காட்சியகம்


ரோபார் நகரில் தொல்லியல் அருங்காட்சியகம் உள்ளது. இது 1998இல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் அரப்பா நாகரிகத்தின் முதல் அகழ்வுக்களமாக நகரத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்லியல் எச்சங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[3]
இதனையும் காண்க
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads