ரேணிகுண்டா சந்திப்பு தொடருந்து நிலையம்

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள தொடர் வண்டி நிலையம் From Wikipedia, the free encyclopedia

ரேணிகுண்டா சந்திப்பு தொடருந்து நிலையம்map
Remove ads

இரேணிகுண்டா சந்திப்பு தொடருந்து நிலையம் (Renigunta Junction railway station) இந்தியாவில் உள்ள  ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி புறநகர் பகுதியான இரேணிகுண்டாவில் உள்ளது. (நிலையக் குறியீடு:RU) [1]  திருப்பதிக்கும், திருக்காளத்திக்கும் புனித யாத்திரை செல்லும் மக்கள் இந்த  நிலையத்தை பயன்படுத்துகின்றனர். அரக்கோணம் சந்திப்பு, காட்பாடி சந்திப்புகளுக்குச் செல்லும் முதன்மைச் சந்திப்பு  நிலையமாக இந்த தொடருந்து நிலையம் உள்ளது. 

Thumb
இரேணிகுண்டா சந்தி அருகே பத்மாவதி விரைவுத் தொடருந்து
விரைவான உண்மைகள் இரேணிகுண்டா சந்திப்பு, பொது தகவல்கள் ...
Remove ads

சந்திப்பு

இரேணிகுண்டா இரயில் நிலையத்தில் நான்கு வெவ்வேறு திசைகளிலிருந்து நான்கு வழித்தடங்கள் உள்ளன. அவை

  • ரேணிகுண்டா-திருப்பதி-பாக்லா-சித்தூர்-காட்பாடி(மேற்கு)
  • ரேணிகுண்டா-கூடூர்-விஜயவாடா(கிழக்கு)
  • ரேணிகுண்டா-கூட்டி-குண்டாக்கல்(வடக்கு)
  • ரேணிகுண்டா-அரக்கோணம்-எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் (தெற்கு)

என்பனவாகும்.

வகைப்பாடு

குண்டக்கல் தொடருந்துக் கோட்டத்திலுள்ள இரேணிகுண்டா சந்திப்பு ஏ-பிரிவில் தரப்படுத்தி வகைப்படத்தப்பட்டுள்ளது.

வருமானம்

கீழே உள்ள அட்டவணை  முந்தைய ஆண்டுகளில்  பயணிகள் வருவாயைக் காட்டுகிறது. [2][Full citation needed]

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வருவாய் (லட்சங்கள்) ...

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads