ரொமேலு லுக்காக்கு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரொமுலு மெனாமா லுகாக்கு பொலுங்கோலி (Romelu Menama Lukaku Bolingoli, 13 மே 1993) பெல்ஜிய தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். இவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கழகமான மான்செஸ்டர் யுனைடெட் அணியிலும் பெல்ஜியம் தேசிய காற்பந்து அணியிலும் அடிப்பாளராக விளையாடுகிறார். தனது 23வது பிறந்தநாளுக்கு முன்பாக பிரீமியர் லீக் போட்டிகளில்50 கோல்களை அடித்த ஐந்து விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்குகின்றார்.[4] இதே போட்டிகளில் 100 கோல்களை அடித்த ஐந்தாவது மிக இளையவராகவும் உள்ளார்.[5] பெல்ஜியம் பன்னாட்டு விளையாட்டாளராக 38 கோல்களை அடித்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.[N1][6]
லுகாக்கு தனது விளையாட்டு வாழ்வை உள்ளூர் ரூபெல் பூம் அணியில் தொடங்கினார். பின்னர் லியர்செ அணியில் ஆடினார். அங்கிருந்து 2006இல் பெல்ஜிய முதல்நிலை லீக் போட்டிகளில் ஆடிய அன்டர்லெக்ட்டிற்கு மாறினார். தனது 16ஆவது அகவையிலேயே தொழில்முறை விளையாட்டாளராக தொடங்கினார். 2009-10ஆம் ஆண்டுகளில் பெல்ஜிய லீக் போட்டிகளில் மிக கூடுதலான கோல்களை அடித்த சாதனை புரிந்தார். 2011இல் பெல்ஜியத்தின் எபனி காலணியை வென்றார். 2011ஆம் ஆண்டில் செல்சீ அணியில் இணைந்தார். 2014இல் எவர்டன் கழகத்திலும் பின்னர் மான்செஸ்டர் யுனைடெட் கழகத்திலும் இணைந்தார.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads