ரோகிணி (செயற்கைக்கோள்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ரோகிணி (rohini) என்பது இஸ்ரோவால் செலுத்தப்பட்ட தொடர் செயற்கைக்கோளின் பெயர் ஆகும். ரோகிணி தொடர், நான்கு செயற்கைக்கோள்களை கொண்டது, அவை அனைத்தும் இஸ்ரோவின் செயற்கைக்கோள் செலுத்தி வண்டிகள் மூலம் செலுத்தப்பட்டது, அதில் மூன்று வெற்றிகரமாக அதன் சுற்றுவட்ட பாதையில் நிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் சோதனை அடிப்படையில் செலுத்தப்பட்டவை.

விரைவான உண்மைகள் தயாரிப்பாளர், நாடு ...
Remove ads

செயற்கைக்கோள் தொடர்

ரோகிணி தொழில்நுட்பம்[1]

இது 35 கிகி எடை உடைய சுழற்சியை நிலைநிறுத்தும் சோதனைச் செயற்கைக்கோள் அதற்கு 3 வாட்டுகள் ஆற்றல் பயன்படுத்தப்பட்டது.இது 10-08-1979 இல் சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து செலுத்தப்பட்டது இதில் செயற்கைக்கோள் செலுத்தி வண்டியின் கண்காணிப்பான் பொருத்தப்பட்டிருந்தது.[2] இந்த செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப் பாதையை அடையவில்லை இருப்பினும் இதன் செயற்கைக்கோள் செலுத்தி வண்டியின் (SLV) பணி மட்டும் வெற்றியாக அமைந்தது.[3]

அர்எஸ்-1[1]

இதுவும் 35 கிகி எடை உடைய சுழற்சியை நிலைநிறுத்தும் சோதனைச் செயற்கைக்கோள் இதற்கு 16 வாட்டுகள் ஆற்றல் பயன்படுத்தப்பட்டது. இது 18-07-1980 இல் சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து செலுத்தப்பட்டது.இது 305 x 919 கி.மீ. சுற்றுவட்டப் பாதையையில் 44.7° சாய்வாக வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் 20 மாத காலம் உயிர்புடன் இருந்தது.[4]

அர்எஸ் –டி1[1]

இது 38 கிகி எடை உடைய சுழற்சியை நிலைநிறுத்தும் சோதனைச் செயற்கைக்கோள் அதற்கு 16 வாட்டுகள் ஆற்றல் பயன்படுத்தப்பட்டது. இது 31-05-1981 இல் சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து செலுத்தப்பட்டது.இதுவும் பாதி வெற்றி தான் பெற்றது இந்த செயற்கைக்கோளால் நாம் எதிர்பார்த்த அளவு தூரத்தை அடைய முடியவில்லை அதனால் 9 நாட்கள் மட்டுமே சுற்றுவட்டப்பாதையில் வட்டமிட்டது, அதாவது 186 x 418 கி.மீ. தூரத்தில் 46° சாய்வில் நிலைநின்றது.இந்த செயற்கைக்கோள் ரிமோட் மூலம் இயங்கும் ஒரு புகைப்பட கருவியையும் சோதனைக்காக எடுத்து சென்றது.[5]

அர்எஸ்-டி2[1]

இது 41.5 கிகி எடை உடைய சுழற்சியை நிலைநிறுத்தும் சோதனைச் செயற்கைக்கோள் அதற்கு 16 வாட்டுகள் ஆற்றல் பயன்படுத்தப்பட்டது. இது 17-04-1983 இல் செலுத்தப்பட்டது. 371 x 861 கி.மீ. தூரத்தில் 46° சாய்வில் நிலைநின்றது. இந்த செயற்கைக்கோள் 17 மாதங்கள் உயிர்புடன் இருந்தது ரிமோட் மூலம் இயங்கும் ஒரு புகைப்பட கருவியையும் இதில் இனைக்கப்பட்டிருந்தது, அது 2500 படங்களுக்கு மேல் புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. இந்த புகைப்பட கருவி சாதாரணமாகவும் மற்றும் அகச்சிவப்பு பட்டைகள் மூலமும் புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டிருந்தது.[6]

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads