ரோசாப்பூப் போர்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரோசாப்பூப் போர்கள் (Wars of the Roses) என்பது இங்கிலாந்தில் கி.பி. 1453 முதல் 1485 வரை நடைபெற்ற போர்கள் ஆகும். இங்கிலாந்து வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.
நான்காம் எட்வர்ட் அரசரின் சந்ததியினர்களுக்குள் ஏற்பட்ட குடும்பச்சச்சரவால் அரசியல் குழப்பம் உண்டானது. இது இறுதியில் சண்டைக்கு இட்டுச் சென்றது. யார்க்கிஸ்டுகளும் லங்காஸ்டிரியர்களும் தங்கள் தங்கள் உரிமையினை நிலைநாட்டி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என எண்ணினர். மன்னரது ஊழல் ஆலோசகர்கள், ஊழல் அமைச்சர்கள் ஆகியோரை நீக்க வேண்டும் என்பதற்காக இப்போர் ஏற்பட்டது. யார்க்கிஸ்டுகள் தங்கள் அடையாளச் சின்னமாக வெள்ளை ரோசாவையும், லங்காஸ்டிரியர்கள் சிவப்பு ரோசாவையும் அடையாளச் சின்னமாக அணிந்து போரிட்டனர். எனவே இப்போர்கள் ரோசாப்பூப் போர்கள் என்று அழைக்கப்பட்டன. இப்போர்களின் இறுதியில் லங்காஸ்ட்ரியர்கள் வெற்றியடைந்தனர். 1485-ல் அரசனான ஹென்றி டியூடர் 1486 ஆம் ஆண்டில் இரு பிரிவினரையும் ஒன்றிணைப்பதற்காக யார்க்கிஸ்ட் மன்னனான நான்காம் எட்வர்டின் மகள் எலிசபெத்தைத் திருமணம் செய்துகொண்டான். இதனால் டியூடர் சபை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தனது ஆட்சியை 117 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.
Remove ads
வெளி இணைப்புகள்
- The Wars of the Roses பரணிடப்பட்டது 2018-03-23 at the வந்தவழி இயந்திரம் Has a large article on 'Soldiers and Warfare during the Wars of the Roses
- warsoftheroses.com includes a map, timeline, info on major players and summaries of each battle
- diagram of the Wars of the Roses
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads