ரோமஹர்சணர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரோமஹர்சணர் (Romaharsana) என்பது காரணப் பெயர். இவரின் உடல் முழுதும் ரோமங்கள் இருக்கும். அந்த ரோமங்கள் இவர் நடக்கும்பொழுது சிலிர்த்து குத்திட்டு நிற்கும். இதனால் ரோமம் ஹர்ஷணம் ஆகி நிற்பதால் ரோம ஹர்ஷணர் என அழைக்கப்பட்டார். ரோமஹர்சனர், வேத வியாசரின் சீடர் ஆவார்.
இவரது மகன் உக்கிரசிரவஸ் ஆவார். ரோமஹர்ஷணர், பிராமணத் தாய்க்கும் சத்திரியத் தந்தைக்கும் வருணக் கலப்பில் பிறந்தவர் என்பதால் சூதர் என்று அழைக்கப்பட்டவர். இவரே புராணங்களைச் சொல்லும் பௌராணிகராக இருந்தார். வேதம் கற்று பிராமணத்துவம் அடைந்திருந்தாலும் சூதர் என்ற பெயரே இருந்தது.
நைமிசாரண்யத்தில் பல மகரிஷிகள் கூடியிருந்த அவைக்கு வந்த பலராமரை அனைவரும் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து மரியாதை செய்த நேரத்தில், ரோமஹர்சனர் மட்டும் இருக்கையில் அமர்ந்த கொண்டே பலராமருக்கு மரியாதை தராத காரணத்தினால், பலராமரால் கொல்லப்பட்டார்.[1][2]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads