ரோஷினி (நடிகை)

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

ரோஷினி என்ற திரைப்பெயரால் நன்கு அறியப்பட்ட ராதிகா சாதனா ஒரு முன்னாள் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 1997-1998 வரை தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றியுள்ளார்.[1][2] இவர் நடிகை ஜோதிகாவின் தங்கை.

விரைவான உண்மைகள் ரோஷினி, பிறப்பு ...
Remove ads

தொழில்

நக்மாவின் பரிந்துரைக்குப் பிறகு, ரோஷினி செல்வாவின் நகைச்சுவைத் திரைப்படமான சிஷ்யாவில் நடிகையாக அறிமுகமானார். அதில் கார்த்திக்குடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.[3] பின்னர் இவர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக மாஸ்டர் (1997) படத்தில் நடித்தார்.

ரோஷினி நடிப்புக்கு வாய்ப்புள்ள பாத்திரங்களை ஏற்க ஆர்வமாக இருந்தார். இதனால் 1997 இன் பிற்பகுதியில் பல வாய்ப்புகளை நிராகரித்தார். அவை கவர்ச்சியான பாத்திரங்களாக இருந்தன. இவர் அதைத்தொடர்ந்து நடிகை மந்த்ரா படத்தை நிராகரித்த பின்னர், அருண்குமார் ஜோடியாக கே. பாலசந்தரின் தயாரிப்பான துள்ளித் திரிந்த காலம் (1998) இல் அவர் பணியாற்றினார். இந்த படமும் இவரது நடிப்பும் கலவையான விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாக மிதமான வெறியைப் பெற்றது.[4] இருப்பினும், அதன்பிறகு, நெப்போலியன் ஜோடியாக புலி பிறந்த மண் போன்ற படங்களில் நடித்தார் அவை வெளிவரவில்லை. அதன் பின்னர் திரைத்துறையிலிருந்து விலகினார்.[5]

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

ரோஷினி நடிகைகள் நக்மா மற்றும் ஜோதிகாவின் தங்கை.[6]

திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தலைப்பு ...

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads