லங்கர் (சீக்கியம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

லங்கர் (ஆங்கிலம்: Langar Punjabi: ਲੰਗਰ, Hindi: लंगर), சீக்கிய சமய வழிபாட்டுத் தலமான குருத்துவாராக்களில் வழிபட வருபவர்களுக்கு சாதி, சமய வேறுபாடுன்றி இலவசமாக சைவ மற்றும் நனிசைவ உணவு வழங்கும் சமையல் கூடமாகும். லங்கரில் உணவு தயாரிக்கவும், பக்தர்களுக்கு உணவு பரிமாறவும், நீர் வழங்கவும் தன்னார்வ சீக்கிய ஆண், பெண் தொண்டர்கள் முன் வருகின்றனர்.[1]

தீபாவளியின் போது மட்டும், அமிர்தசரசில் உள்ள ஹர்மந்திர் சாகிப் குருத்துவாராவின் லங்கரில் மட்டும் அசைவ உணவு பக்தர்களுக்குப் பிரசாதமாக பரிமாறப்படுகிறது. உலகம் முழுவதும் சீக்கியர்கள் வாழும் பகுதிகளில் உள்ள குருத்துவாராக்களில் லங்கர் கட்டாயம் இடம் பெற்றிருக்கும்.

சீக்கிய பண்டிகை நாட்களில் குருத்துவராக்களில் கூட்டம் கூடுவதால், திறந்த வெளி லங்கர்கள் அமைக்கப்படுகிறது.

Remove ads

வரலாறு

சாதி, சமய, இனம், மொழி, சமுக வேறுபாடுகளைக் களையும் பொருட்டு, சீக்கிய சமயத்தின் நிறுவனரான குருநானக் லங்கர் எனும் பொதுச் சமயலறை அல்லது சமபந்தி விருந்து எனும் திட்டத்தை சீக்கிய சமயத்தில் கொண்டு வந்தார்.[2] பின்னர் மூன்றாம் சீக்கிய குரு அமர்தாஸ் லங்கர் திட்டத்தை அனைத்து குருத்துவராக்களில் கொண்டு வந்தார்.[3]

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads