லட்சுமிஹர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லட்சுமிஹர் (பிறப்பு: 20 சூன் 1998) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளரும், படத்தொகுப்பாளரும் ஆவார். இவரின் கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள் சிறுகதை தொகுப்புகாக சாகித்திய அகாதமி யுவ பரஸ்கார் விருது 2025 ஆம் ஆண்டு வழங்கபட்டது.[1]
பிறப்பும் கல்வியும்
லட்சுமிஹர் மதுரை மாவட்டத்தின், உசிலம்பட்டியில் உள்ள கீழச்செம்பட்டி என்னும் ஊரில் திருநாவுக்கரசு, அருணா இணையருக்கு இரண்டாவது பிள்ளையாக 1998 சூன் 20 அன்று பிறந்தார். இவருக்கு ஒரு அக்காள் உண்டு.
திண்டுக்கல்லில் பள்ளிக் கல்வியைப் பயின்ற இவர் கரூரில் உள்ள குமாரசாமி கல்லூரியில் இயந்திரப் பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். சென்னையில் திரைப்படத் தொழில் நுட்பத்தில் பட்டயப் படிப்பை முடித்தார்.
தொழில்
படத்தொகுப்பில் ஆர்வம் கொண்ட லட்சுமிஹர் திரைப்பட உருவாக்கம் சார்ந்த பணிகளில் பணியாற்றிவருகிறார்.[2][3]
எழுத்துப் பணிகள்
லட்சுமிஹர் எழுதிய ஆண்ட்ராய்ட் வெர்ஷன் என்ற சிறுகதை 2021 இல் யாவரும் இணைய இதழில் முதன்முதலில் வெளியானது. பின்னர் கனலி, வாசகசாலை, யாவரும், குறி, காலச்சுவடு, கல்குதிரை, கணையாழி, வனம், வல்லினம், பதாகை, உயிர் எழுத்து, உயிர்மை ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாயின.
நூல்கள்
- ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் & பிற கதைகள் (2021, யாவரும்)
- 'டார்லிங்' என பெயர்சூட்டப்பட்ட சித்தாந்தம் (2022, யாவரும்)
- கிளாஸிக் டச் (2023, யாவரும்)
- கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள் (2024, யாவரும்)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads