லட்சுமி நரசிம்மர் கோயில், அந்தர்வேதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர் கோவில் என்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சகினேதிபள்ளி மண்டலத்தின் அந்தர்வேதி என்ற கோயில் நகரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியின் கிழக்கிலும், தெற்கிலும் வங்கக் கடல் உள்ளது, கோதாவரி ஆற்றின் துணை ஆறான வஷிஸ்ட கோதாவரி ஆறு ஆகியவை மேற்கிலும் வடக்கிலும் உள்ளன.[1] இக்கோயில் 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது. இது 108 நரசிம்ம தலங்களுள் 32 ஆம் தலமாக கருதப்படுகிறது.
Remove ads
கோயில் அமைப்பு
இக்கோயில் ஐந்து நிலை விமான கோபுரத்தைக் கொண்டுள்ளது. கோவிலில் நுழையும்போது ஒரு பக்கம் கருடனும் மறு பக்கம் அனுமனும் உள்ளனர். கருவறையின் கூரையில் வட பத்ர சாயி தரிசனம் தருகிறார். கருவறையில் மூலவர் நரசிம்மர், லட்சுமியை மடி மீது அமர்த்தி காட்சி தருகிறார். கருவறையை சுற்றி வந்தால் பிரகாரத்தின் கிழக்கு பக்கம் ராஜலட்சுமி மற்றும் வெங்கடேஸ்வரர், வடக்கில்பூதேவி மற்றும் ரங்கநாதஸ்வாமி, மேல் திசையில் சந்தான கோபாலர், கேசவர், தென் திசையில் ஆச்சார்யர்களும் ஆழ்வார்களும் சந்நிதி கொண்டுள்ளனர். சதுர்புஜ அனுமனுக்குத் தனி சந்நிதி. மூலவரை தவிர்த்து பிரம்மா,விஷ்ணு, சிவனும் காட்சி தருகிறார்கள். இங்கு வசிட்டருக்கும் ஒரு கோவில் உண்டு. 54 அடி உயரமுள்ள இந்தக் கோவில் பூமிக்கு கீழேயும் அத்தனை அளவு கட்டப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப் பகுதியில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.[2]
Remove ads
செல்லும் வழி
அந்தர்வேதிக்குச் செல்ல மூன்று வழிகள் உள்ளன. நீராவிப்படகுகள் உள்ளன. மாறாக ஆற்றைக் கடக்க படகு மூலமாக சக்கீனிபள்ளியை அடந்து, அங்கிருந்து சாலை வழியாக அந்தர்வேதிக்குச் செல்லலாம். மூன்றாவது பாதையாக புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் வழியாக சின்சினடாவை கடந்து அந்தர்வேதியை அடையலாம்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads