லால் தன்ஃகாவ்லா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

லால் தன்ஃகாவ்லா (Lal Thanhawla) (பிறப்பு மே 6, 1942) இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரம்மின் முதலமைச்சராக திசம்பர் 11, 2008 முதல் 2018 வரை இருந்தவர். இவரது கட்சியான இந்திய தேசிய காங்கிரசுக்கு சட்டப்பேரவையில் 32 உறுப்பினர்கள் உள்ளனர்.

விரைவான உண்மைகள் லால் தன்ஃகாவ்லா, மிசோரம் முதலமைச்சர் ...
Remove ads

இளமையும் கல்வியும்

மார்டௌன்புங்கா சைலோ மற்றும் லால்சாம்லியனிக்கும் மகனாகப் பிறந்தவர். 1958ஆம் ஆண்டு மெட்ரிகுலேசன் முடித்து 1961ஆம் ஆண்டு கலைகளில் இடைநிலைப் படிப்பை முடித்தார். சிறிது காலம் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இசுகாட்டிசு தேவாலயக் கல்லூரியில் படித்து வந்தார். பின்னர் 1964ஆம் ஆண்டு கௌஃகாட்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அஜல் கல்லூரியிலிருந்து பி.ஏ பட்டம் பெற்றார்.தற்போது அய்சால் நகரில் வசிக்கிறார்.

அரசியல்

லால் தன்ஃகாவ்லா மாவட்ட பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகத்தில் எழுத்தராக வாழ்வைத் துவங்கினார். பின்னர் அசாம் கூட்டுறவு அபெக்சு வங்கியில் சேர்ந்தார். 1966ஆம் ஆண்டு மிசோ தேசிய முன்னணியில் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். 1967ஆம் ஆண்டு அதன் செயலாளராக விளங்கினார். சில்ச்சரில் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையான பின்னர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.1973ஆம் ஆண்டு கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.1978 மற்றும் 1979 ஆண்டுகளில் ஆட்சிப்பகுதியாக இருந்த மிசோரம் சட்டப்பேரவை உறுப்பினாராக இருந்தார்.1984ஆம் ஆண்டு மாநில நிலை பெற்ற மிசோரமின் தேர்தல்களில் அவர் தலமையில் போட்டியிட்ட காங்கிரசு கட்சிக்கு பெரும் வெற்றி கிடைத்ததை அடுத்து முதலமைச்சரானார்.1986ஆம் ஆண்டு மிசோரம் தேசிய முன்னணிக்கும் இந்திய அரசிற்கும் ஏற்பட்ட அமைதி உடன்படிக்கையை யொட்டி தமது முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.1987ஆம் நடந்த தேர்தல்களில் மீண்டும் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றார். 1989 மற்றும் 1993ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் வெற்றிபெற்று முதல்வராகத் தொடர்ந்து வந்தார்.1998ஆம் ஆண்டு தேர்தல்களில் தோல்வி கண்டவர் மீண்டும் 2003ஆம் ஆண்டுத் தேர்தல்களில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

Remove ads

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads