லா. ச. ராமாமிர்தம்

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

லா. ச. ராமாமிர்தம்
Remove ads

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்திலிருந்தே எழுதி வந்தவர்.[1] இவர், தனது 92வது பிறந்த நாளில் இறந்தார்.[2]

விரைவான உண்மைகள் லா. ச. ரா, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

1916ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம், பெங்களூரில் பிறந்தவர்.[3] இவருடைய இளமை பருவம் முழுவதும் காஞ்சிபுரம் அருகே இயற்கை சூழல் மிகுந்த அய்யம்பேட்டை என்னும் கிராமத்தில் வளர்ந்தார். இவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி. இவருடைய மனைவி ஹைமாவதி. இவருக்கு 4 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவருடைய தந்தை சப்தரிஷி, ல.ச.ரா -வின் மீது தனிக்கவனம் செலுத்தி அவரே ஆசிரியராக இருந்து வீட்டிலேயே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பாடங்கள் கற்பித்து வந்தார். தந்தையார் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களில் இவருக்கு 12 வயதுக்குள் நல்ல ஆர்வமும், புலமையும் ஏற்பட்டது. அரசுப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு முதல் 10 -ஆம் வகுப்பு வரை படித்து பள்ளி இறுதி தேர்வில் தேறினார்.

Remove ads

இலக்கிய உலகில்

லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை தன்னுடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற புதினத்தை எழுத வைத்தது. இவருக்கு 1989-ல் சாகித்திய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.

லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் இவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார்.

இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். இவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" போன்ற புதினங்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் ஆகும். "சிந்தாநதி" இவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.

இவருடைய படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுவிட்டதால், அவற்றில் பல தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் கிடைக்கின்றன.


Remove ads

குடும்பம்

லா. ச. ராமாமிர்தத்தின் மனைவி ஹேமாவதி. இவர்களுக்கு நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

மகன் பெயர்கள்: ஜெயராமன், கண்ணன், சந்திரசேகரன் மற்றும் லா.ரா.அனந்தபத்மநாபன் (ஆங்கிலம்: *La.ra.Ananthapadmanaban*, ஸ்ரீகாந்த் என அழைக்கப்படுகிறார்) மகளின் பெயர்: காயத்ரி.

லா.ரா.அனந்தபத்மநாபன் தன்னுடைய பெற்றோர்கள் லா.ச.ராமாமிர்தம் மற்றும் ஹேமாவதியை, அவர்களுடைய இறுதி மூச்சு வரை அன்புடன் கவனித்துக் கொண்டார்.

லா.ரா.அனந்தபத்மநாபன் தமிழில் பல முக்கியமான கதைகள் எழுதிய எழுத்தாளர் ஆவார். அவர் “அக்கா”, “தனிமை”, “பைலட்”, “ஹார்த்தி” உள்ளிட்ட தொடர்கதைகள், மற்றும் “அடையாளம்”, “பெண்”, “தகப்பன்” போன்ற தனிக்கதைகளை எழுதியுள்ளார். மொத்தம் 125க்கும் மேற்பட்ட கதைகளை எழுதியுள்ளார்.

    • அவர் எந்தவொரு சமூக ஊடகங்களிலும் இணைந்தவரல்லர்;

அவரது அமேசான் ஆசிரியர் பக்கம்: (https://www.amazon.com/author/ananthapadmanabanlara) [4]

மறைவு

லா.ச.ரா 2007 அக்டோபர் 30 இல் தனது 92 வயதில், சென்னையில் காலமானார்.[2]

எழுதிய நூல்கள்

புதினம்

  1. புத்ர (1965)
  2. அபிதா (1970)
  3. கல்சிரிக்கிறது
  4. பிராயச்சித்தம்
  5. கழுகு
  6. கேரளத்தில் எங்கோ

சிறுகதைகள்

  1. இதழ்கள் (1959)
  2. ஜனனி (1957)
  3. பச்சைக் கனவு (1961) (பச்சைக்கனவு, அபூர்வராகம், பேசும்விரல், அம்முலு, தாஷாயணி, பாற்கடல், மேகரேகை, மண், சுமங்கல்யன், சாட்சி, சாவித்ரி)
  4. கங்கா (1962)
  5. அஞ்சலி (1963)
  6. அலைகள் (1964)
  7. தயா (1966)
  8. மீனோட்டம்
  9. உத்தராயணம்
  10. நேசம்
  11. புற்று
  12. துளசி
  13. என் பிரியமுள்ள சினேகிதனுக்கு
  14. அவள்
  15. த்வனி
  16. விளிம்பில்
  17. அலைகள்
  18. நான்
  19. சௌந்தர்ய
Remove ads

நினைவலைகள்

  1. சிந்தாநதி (1989ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
  2. பாற்கடல்

கட்டுரைகள்

  1. முற்றுப்பெறாத தேடல்
  2. உண்மையான தரிசனம்

பெற்ற விருதுகள்

1989ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads