லியூக்ட்ரா
பண்டைய கிரேக்க சிற்றூர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
லியூக்ட்ரா (Leuctra or Leuktra, பண்டைக் கிரேக்கம்: τὰ Λεῦκτρα tà Leûktra , Attic Greek உச்சரிப்பு: [tà lêu̯k.tra] or பண்டைக் கிரேக்கம்: τὸ Λεῦκτρον tò Leûktron)[1] என்பது பண்டைய போயோட்டியாவின் ஒரு சிற்றூர் ஆகும். இது தெஸ்பியாவிலிருந்து பிளாட்டீயா[2] செல்லும் சாலையில், அமைந்துள்ளது. கிமு 371 இல் எசுபார்த்தா மற்றும் தீப்சு இடையே இந்த ஊரின் சுற்றுப்புறத்தில் நடந்த புகழ்பெற்ற லியூக்ட்ரா சமரின் பதிவில் மட்டுமே இதன் பெயர் வரலாற்றில் உள்ளது. இந்த சமரின் முடிவில் எசுபார்த்தாவின் மேலாதிக்கம் தகர்க்கப்பட்டது. லியூக்ட்ராவின் சமவெளியில், லூக்ட்ரியன் இனத்தைச் சேர்ந்த ஸ்கெடாச்சின் இரண்டு மகள்களின் கல்லறைகள் இருந்தன. அந்த இருவரும் எசுபார்த்தன்களால் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்டனர்; இந்த இடத்தில் எசுபார்த்தன்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்று ஒரு ஆரக்கிள் கணித்ததால், இந்த கல்லறையில் போருக்கு முன்பு தீப்சிள் தளபதி எபமினோண்டாசால் மலர் மரியாதை செய்யப்பட்டது.[3][4][5][6]
லுக்ட்ராவின் தளம் லெஃப்க்ட்ரா என்ற நவீன கிராமத்திற்கு அருகில் உள்ளது, இது பண்டைய இடத்துடனான தொடர்பை நினைவூட்டும் வகையில் பெயர் மாற்றப்பட்டது.[7][8]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads