லெங்புய் விமான நிலையம்

From Wikipedia, the free encyclopedia

லெங்புய் விமான நிலையம்
Remove ads

லெங்புய் விமான நிலையம் (ஐஏடிஏ: AJL, ஐசிஏஓ: VELP) இந்திய மாநிலமான மிசோரத்தின் அய்சால் நகரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து கொல்கத்தா, குவகாத்தி, இம்பால் ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள மூன்று டேபிள் டாப் ஓடுபாதையைக் கொண்ட விமான நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். மற்றவை கோழிக்கோடு மற்றும் மங்களூர். இது விமானியிடமிருந்து மிகவும் துல்லியமான அணுகுமுறை தேவைப்படுகிறது.

விரைவான உண்மைகள் அய்சால் விமான நிலையம் Lengpui Airport Aizawl Airport, சுருக்கமான விபரம் ...

இந்த விமான நிலையம் 97.92 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.[1] இது இரண்டு ஆண்டுகள், இரண்டு மாதக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கட்டுமான பணிகள் டிசம்பர் 1995ம் ஆண்டு ஆரம்பிக்கபட்டு பிப்ரவரி 1998ம் ஆண்டு முடிக்கபட்டது. இதை கட்டுமுன் 130 கி.மீ (81 மைல்) தொலைவில் உள்ள பைரபி ரயில் நிலையமும், 205 கி.மீ (127 மைல்) தூரத்தில் உள்ள சில்சார் விமான நிலையம் மட்டுமே போக்குவரதுக்கு உகந்தது. இந்த விமான நிலையத்தில் 300 பயணிகள் வந்து செல்லும் அளவுக்கு வசதியுள்ளது. முன்பு ஏர் டெக்கான், கிங்பிஷர் நிறுவனமும் லெங்க்புயில் தன் சேவையை ஆரம்பித்தன, ஏப்ரல் 2012 க்கு பின் தன் சேவையை நிறுத்தி கொண்டன. [2]

Remove ads

தொழில் நுட்ப விவரங்கள்

மலைபாங்கான இடத்தில் 2500 மீட்டர் விமான ஓடு தளத்திற்கு அடியில் நீரோடைகள் இருப்பது லெங்க்புய் விமான நிலையத்தின் தனித்துவம்.

வானூர்திகள்

மேலதிகத் தகவல்கள் விமான நிறுவனங்கள், சேரிடங்கள் ...

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads