இலபாப்பு மாகாணம்

துர்க்மெனிஸ்தானின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia

இலபாப்பு மாகாணம்
Remove ads

லெபாப் பிராந்தியம் (Lebap Region, பாரசீக மொழியில்; لب آب Labe âb ) என்பது துர்க்மெனிஸ்தானின் பிராந்தியங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடகிழக்கில், ஆப்கானித்தான், உசுபெக்கிசுத்தான் எல்லையில் ஆமூ தாரியாவில் உள்ளது. இதன் தலைநகர் துருக்மெனாபாத் (முன்னர் Çärjew பெயரிடப்பட்டிருந்தது) ஆகும். இந்த மாகாணம் 93,730 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும் 1,334,500 மக்கள் இங்கு வசிக்கின்றனர் (2005 ஆம் ஆண்டு கணக்கு. ).[1]

விரைவான உண்மைகள் லெபாப், நாடு ...

லெபாப் பாரசீக மொழி சொல்லான லேப்-இ (b (لب of) என்பதன் துர்க்மெனிய வடிவமாகும். இதன் பொருள் "ஆற்றங்கரை" என்பதாகும். இது ஆமூ தாரியா ஆற்றின் நடுப்பகுதியை குறிக்க நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது.[2]

இது துபெமெனிஸ்தானின் மிக உயர்ந்த மலையான ஆரிபாபா சிகரத்தை (3137 மீட்டர்) உடைய ரெபெடெக் இயற்கை காப்பகம் மற்றும் கோடெண்டாக் இயற்கை காப்பகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இப்பிராந்தியமானது இப்பகுதி அமுதேரியா ஆற்றின் அருகே அமைந்துள்ளது. கிசில்கம் பாலைவனம் ஆற்றின் கிழக்குப் பக்கத்திலும் கராகம் பாலைவனம் ஆற்றின் மேற்குப் பக்கத்திலும் அமைந்துள்ளது. உலகின் மிக உயர்ந்த தரமான பருத்தி மற்றும் கோதுமையை உற்பத்தி செய்யக்கூடிய இப்பிராந்தியமானது இங்குள்ள ஏராளமான நீர்வளத்துக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது.

இயற்கை எரிவாயு ( மலாய் எரிவாயு புலம் ) மற்றும் பிற கனிமச் சுரங்கங்கள் போன்ற இயற்கை வளங்கள் இப்பகுதியை செழிப்பாக்குகிறது. இந்த பிராந்தியத்தில் இருந்து சீன-துர்க்மெனிஸ்தான் எரிவாயு குழாய் இணைப்பு தொடங்கப்பட்டது. லெபாப் பிராந்தியங்கள் பாக்டியார்லிக் இயற்கை எரிவாயு புலமானது சீனாவுக்கான இயற்கை எரிவாயுவின் முக்கிய வழங்கலாக உள்ளது.

Remove ads

மாவட்டங்கள்

2017 நவம்பர் 27 நிலவரப்படி, லெபாப் மாகாணம் ( லெபாப் வெலாசாட்டி ) 10 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது ( etrap, plural etraplar ):[3][4]

  1. ஜார்ஜு (முன்பு செர்டராபத்)
  2. தர்கனாதா (முன்னர் பிராட்டா)
  3. டெனுவ் (முன்பு கல்கினியா)
  4. டவ்லெட்லி
  5. ஃபராப்
  6. ஹலாஸ்
  7. ஹோஜம்பாஸ்
  8. கெர்கி (முன்பு அட்டமிராத்)
  9. கோடெண்டாக்
  10. சயைத்
  11. சாகர்

அந்த தேதியின்படி, நான்கு மாவட்டங்கள் (Beýik Tkrkmenbaşy, Garaşsyzlyk, Garabekwül, and Sakar) அகற்றப்பட்டு அவற்றின் பிரதேசங்கள் மற்ற மாவட்டங்களில் இணைக்கபட்டன.

2017 சனவரி முதல் நாள் நிலவரப்படி, மாகாணத்தில் 15 மாநகரங்கள் (города அல்லது şäherler ), 23 நகரங்கள் (посёлки அல்லது şäherçeler ), 106 ஊரக அல்லது கிராம சபைகள் (сельские советы அல்லது geňeşlikler ), மற்றும் 430 கிராமங்கள் (села, ob அல்லது obalar ) உள்ளன.[3]

  • மாநகரங்கள் அடங்கும்
    • டானேவ் (முன்னர் கல்கினியா)
    • தர்கனாதா (முன்னர் பிராட்டா)
    • தோஸ்த்லுக்
    • ஃபராப்
    • கராபகேவல்
    • காசோஜக்
    • ஹலாஸ்
    • ஹோஜம்பாஸ்
    • கெர்கி (முன்னர் அட்டமிராத்)
    • கோடெண்டாக்
    • மாக்டன்லி (முன்னர் கௌர்தக்)
    • சாகர்
    • செயத்
    • செடி
    • துருக்மெனாபாத் (முன்னர் சார்ஜூ)
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads