லே (நகரம்)

From Wikipedia, the free encyclopedia

லே (நகரம்)
Remove ads

லே அல்லது லெக் (Leh) என்பது லடாக் பகுதியில் உள்ள ஒரு பெரிய நகரம் ஆகும். வட இந்தியாவின் லடாக் என்ற யூனியன் பிரதேசத்திற்கு தலைநகரமாகவும் இது உள்ளது. லே மாவட்டத்தில் அமைந்துள்ள லே இமயமலை இராச்சியம் லடாக்கின் வரலாற்று தலைநகராகவும் இருந்தது. லடாக் இராச்சியத்தின் இருக்கை லே அரண்மனையில் இருந்தது. திபெத்தில் உள்ள பொட்டாலா அரண்மனை கட்டப்பட்ட அதே நேரத்தில் அதே பாணியில் லடாக் அரச குடும்பத்தின் முன்னாள் மாளிகையும் கட்டப்பட்டது. லே கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 3,524 மீட்டர் (11,562 அடி) உயரத்தில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 1 வழியாக தென்மேற்கில் சிறீநகரையும் தெற்கே லே – மணாலி தேசிய நெடுஞ்சாலை வழியாக மணாலியையும் இணைக்கிறது. 2010 ஆம் ஆண்டில் மேகம் வெடிப்பு மூலம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் லே நகரம் பெரிதும் சேதமடைந்தது.

Thumb
லே
Thumb
லே
Remove ads

வரலாறு

திபெத்தின் கிழக்கு மற்றும் காசுமீரீன் மேற்கு இவற்றுக்கிடையில் உள்ள சிந்து பள்ளத்தாக்கில் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்து வந்த வர்த்தக பாதைகளில் லே ஒரு முக்கியமான நிறுத்தமாக இருந்தது. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலும் இருந்ததாகவும் இதை கூறலாம். ப்பு, தானியங்கள், காசுமீர் கம்பளி, சாரா எனப்படும் மருந்து, பனாரசு அலங்காரப் பட்டு, கருநீலச் சாயம் ஆகியவை இப்பாதையின் வழியாக கொண்டு செல்லப்பட்டன.

குசான வம்சத்தினரின்ref>Hill (2009), pp. 200–204.</ref> காலந்தொட்டே சீனாவிலிருந்து லடாக் வழியாக இந்தியாவிற்கு ஒரு வர்த்தக பாதை இருந்ததைப்பற்றி சீனர்கள் அறிந்திருந்தனர் என்பதற்கான சில அறிகுறிகள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் திபெத்திய இளவரசர், சிகைட் எல்டி நைமா கோனின் இராச்சியம் உருவாவதற்கு முன்னரே டாங் வம்சத்தினர்[1] இப்பாதையை நிச்சயமாக அறிந்திருந்தனர். 300 ஆண்களை மட்டுமே இராணுவ வீர்ர்களாக கொண்டிருந்த போதிலும் நைமா கோன் மேற்கு திபெத்தை கைப்பற்றினார். பல நகரங்கள் மற்றும் அரண்மனைகள் நைமா கோனால் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது, சே நகரில் முக்கிய சிற்பங்களை உருவாக்க அவர் உத்தரவிட்டார். அனைவரின் மத நலனுக்காக அவற்றை உருவாக்கியதாக ஒரு கல்வெட்டில், அவர் கூறுகிறார். இவரது நடவடிக்கைகள் அங்கு புத்தமத எதிர்ப்பு மறைந்துவிட்டது[2] என்பதை காட்டின. நவீன லேவுக்கு கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ள சே பண்டைய லடாக்கிய மன்னர்களின் இருக்கையாக இருந்தது.

டெலெக்சு நம்கியாலின் (1660-1685) ஆட்சியின் போது, அப்போது முகலாய சாம்ராஜ்யத்தில் ஒரு மாகாணமாக இருந்த காசுமீரின் நவாப், மங்கோலிய இராணுவம் லடாக்கை விட்டு வெளியேற தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டது. 1679-1684 ஆம் ஆண்டு திபெத்-லடாக்-முகலாயப் போரில் டெலெக்சு நம்கியாலுக்கு உதவுவதற்கான கட்டணமாக, நவாப் பல கடுமையான கோரிக்கைகளை முன்வைத்தார். லே அரண்மனைக்கு கீழே லேவில் உள்ள சந்தையின் மேல் முனையில் லேவில் ஒரு பெரிய சன்னி பிரிவு முசுலீம் பள்ளிவாசலைக் கட்டுவது அதிலொன்றாகும். இந்த பள்ளிவாசல் இசுலாமிய மற்றும் திபெத்திய கட்டிடக்கலையின் கலவையை பிரதிபலிக்கிறது. 500 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு தங்கமுடியும். இது லேவில் உள்ள முதல் பள்ளிவாசல் அல்ல; ஏற்கனவே இருக்கும் இரண்டும் பழையவை மற்றும் சிறியவைகளாக உள்ளன [3].

பல்வேறு வர்த்தக பாதைகளும் பாரம்பரியமாக நான்கு திசைகளிலிருந்தும் வந்து லேவில் இணைந்துள்ளன. அவற்றில் பஞ்சாபிலிருந்து மாண்டி செல்லும் நவீன நெடுஞ்சாலை, குலு பள்ளத்தாக்கு வழி, ரோதாங் கணவாய் வழி, லகால் வழி, சிந்து பள்ளத்தாக்கு வழி, போன்றவை நேரடியான வழிகளாக உள்ளன. இன்று சோயி கணவாய் வழியாக கார்கிலுக்குச் சென்று பின்னர் சிந்து பள்ளத்தாக்கு வழியாக லே வரை செல்லும் அதே சாலையைப் போலவே சிறீநகரில் இருந்து செல்லும் பாதையும் இருந்தது. பால்டிசுதானில் இருந்து இரண்டு கடினமான வழிகள் இருந்தன. அவற்றில் பிரதானமானது சிந்துவிலிருந்து சியோக் பள்ளத்தாக்கு வரை ஒரு கணவாய் வழியாக ஓடி பின்னர் அனு நதியிலிருந்து சிந்து வரை மீண்டும் கால்சிக்கு கீழே ஓடியது. மற்றொன்று சிகார்டுவிலிருந்து நேராகச் சென்று சிந்துவுக்கும் அங்கிருந்து கார்கில் மற்றும் லே வரை சென்றது. லேகாவிலிருந்து கார்கோரம் கணவாய் மற்றும் சைதுல்லா வழியாகச் செல்லும் கோடை மற்றும் குளிர்கால வழிகள் இரண்டும் இருந்தன. இறுதியாக, லேவிலிருந்து லாசாவுக்கு இரண்டு வழிகள் இருந்தன [4].

தற்போதைய அரண்மனை மற்றும் நகரத்திற்கு உச்சியில் கட்டப்பட்ட உயரமான நம்கியால் ('வெற்றி') சிகரம் லடாக்கில் முதன்முதலில் பதிவுசெய்யப்பட்ட அரச குடியிருப்பு ஆகும். இப்போது அது பாழடைந்த கோட்டையாக உள்ளது. லே அரண்மனை மன்னர் செங்கே நம்கியால் (1612-1642) கட்டப்பட்டது, இது போர்த்துகீசிய பாதிரியார் பிரான்சிசுகோ டி அசெவெடோ 1631 இல் லேவுக்கு வருகை செய்த காலத்திற்கும் முற்பட்டதாகும்., ஆனால் பாதிரியார் அதைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. செங்கே நம்கியாலின் 1642 இல் மரணம்.அடைந்தார்.

லே அரண்மனை ஒன்பது மாடி உயரம் கொண்டது; மேல் தளங்கள் அரச குடும்பத்திற்கு இடமளித்தன, தொழுவங்கள் மற்றும் அங்காடி அறைகள் கீழ் தளங்களில் அமைந்துள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காசுமீர் படைகள் முற்றுகையிட்டபோது இந்த அரண்மனை கைவிடப்பட்டது. அரச குடும்பத்தினர் தங்கள் வளாகத்தை தெற்கே சிந்துவின் தென் கரையில் உள்ள சுடோக் அரண்மனையில் உள்ள தற்போதைய வீட்டிற்கு மாற்றினர்.

Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads