லைசின் (Lysine) [குறுக்கம்: Lys (அ) K][2] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)(CH2)4NH2. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: AAA மற்றும் AAG. லைசின் காரத்தன்மைக் கொண்டதாகும். லைசினில் உள்ள ε-அமினோ தொகுதியானது பரவலாக ஹைட்ரசன் பிணைப்பிலும், வினையூக்கத்தில் பொது காரமாகவும் பங்கேற்கிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
லைசின்
Skeletal formula of the L-isomer (neutral form)
Ball-and-stick model of lysine at physiological pH (zwitterionic form)