லைசென்சு ராஜ்ஜியம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

லைசென்சு ராஜ்ஜியம் (License Raj) (அ) அனுமதிச்சீட்டு அரசியல் (அ) அனுமதிச்சீட்டு அதிகார வரம்புமீறல் என்பது விடுதலை அடைந்த இந்தியாவில் 1947 ல் இருந்து 1990 ம் ஆண்டு வரை நடைமுறையிலிருந்த வணிகத்தின் மீதான கடுமையான அரச கட்டுப்பாட்டு கொள்கைகளை குறிப்பதற்கு பயன்படுத்தப்படும் சொல்லாடலாகும். இக்காலக்கட்டத்தில் இந்தியாவில் வணிகம் செய்வதற்கு நிறைய அரசாங்க கட்டுப்பாடுகள் இருந்தன.தொழில் தொடங்குவதற்கான அனுமதியைப் பெற கடுமையான வழிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன.அக்காலக் கட்டத்தில் ஒரு புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதி பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. இருமுவதற்கு அனுமதி தும்முவதற்கும் அனுமதி என்பது போல வணிகத்தின் ஒவ்வொரு நிலையிலும் அரசு அதிகாரிகளிடம் அனுமதி பெறும் நிலை இருந்தது. இதனால் தேவையற்ற கால தாமதமும், அதனால் பொருள் நட்டமும் ஏற்பட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது. மேலும் இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் முறை தவறிய ஊழலுக்கும், கையூட்டுக் கலாச்சாரத்திற்கும் வித்திட்டதாக பொருளாதார அறிஞர்கள் சிலர் வாதிடுகின்றனர். இந்தியா விடுதலை அடைந்தவுடன், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திப் பிடிக்கும் முழு பொறுப்பும் புதிதாய் அமைக்கப்பெற்ற அரசியல் சாசனத்தின் வழி வந்த இந்திய அரசின் தலையில் விழுந்தது.இதனை சமாளிக்க இந்திய அரசு பொருளாதாரத்தின் அனைத்துக் கூறுகளையும் கட்டில் வைக்க எண்ணியது.அதனால் வந்த வினையே லைசென்சு ராஜ்ஜியம் ஆகும்.[1][2][3]

Remove ads

லைசென்சு ராஜ்ஜியத்திற்கான அவசியம்

இரு நூற்றாண்டுகளாக அந்நியர் ஆதிக்கத்திலிருந்த இந்தியா,விடுதலை அடைந்த நிலையில் 200 ஆண்டு தொடர்ச்சியான பொருளாதாரச் சீரழிவுகளால் தற் சார்பு அற்றும், மந்த நிலையிலும், குழப்ப நிலையிலும் இருந்தது. அதள பாதாளத்திலிருந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து உயர்த்த வலிமையான கட்டமைப்புகள் தேவைப்பட்டன. சரியான திசையில் பொருளாதாரத்தை வழிநடத்த கடுமையான கட்டுப்பாடுகள் அவசியம் ஆயின. இதனையெல்லாம் கருத்தில் கொண்டே வணிகத்தின் ஒரு பகுதியான தொழில் தொடங்குவதற்கான அனுமதி பெறுவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நல்ல நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட இத்தகைய கட்டுப்பாடுகளே பிற்காலத்தில் ஊழல் மற்றும் கையூட்டுச் சீரழிவுகளுக்கும் காரணமாயின. மாறி வரும் சூழ்நிலைக்கேற்ப கொள்கைகளையும், கோட்பாட்டுகளையும் மாற்றிக்கொள்ளாமையும் இதற்கு ஒரு காரணமாகும்.

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

  • இந்திய பொருளாதாரக் கொள்கைகள்- சுதந்திரம் முதல் இன்று வரை
  • இந்திய பொருளாதார சீர்திருத்தம் 1991

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads