லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைடு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
லைசெர்ஜிக் ஆசிட் டைதலமைடு (Lysergic acid diethylamide, சுருக்கமாக எல்எஸ்டி அல்லது எல்எஸ்டி-25, அல்லது லைசெர்கைடு) பேச்சுவழக்கில் ஆசிட், என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட இல்பொருள் தோற்றம் உருவாக்குகின்ற ஓர் போதை மருந்து ஆகும். இதனை உட்கொண்டவரின் சிந்தனை பாதிக்கப்படுவதுடன் கண்கள் திறந்த அல்லது மூடியநிலையில் மாயத்தோற்றங்கள் நிகழ்வதும் இயல்பாக உள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு நேர உணர்ச்சி பிறழ்ச்சியும் மாறிய அகநிலைச் சார்ந்த அனுபவங்களும் ஏற்படுகின்றன. 1960களில் நிகழ்ந்த மாற்றுப் பண்பாட்டு (ஹிப்பி) குமுகத்தில் முதன்மை பங்கு வகித்தது. இது பொதுவாக சடங்குசார் ஆழ்நிலை எண்ணத்தூண்டலுக்காகவும் பொழுதுபோக்கு மருந்தாகவும் உளவியல் சிகிச்சை மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டது. இது அடிமைப்படுத்தக்கூடியதல்ல; மூளைக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை; எடுக்குமளவிற்கு மிகக் குறைந்த நச்சுமை உடையது. இருப்பினும் மனக்கலக்கம், துன்புறு மனநோய், திரிபுக்காட்சி போன்ற கடுமையான உளவியல் எதிர்வினைகளுக்கு வாய்ப்பு உள்ளது.[3]
எல்எஸ்டி 1938இல் முதன்முதலாக ஆல்பர்ட் ஹாப்மனால் செயற்கையாக எர்கோடமைனிலிருந்து உருவாக்கப்பட்டது. முன்னதாக ஆர்த்தர் இசுடோல் என்பவர் ராய் என்ற புல்வகையில் வளரும் எர்கோட் என்ற பூஞ்சையிலிருந்து எர்கோடமைனைக் கண்டுபிடித்திருந்தார்.
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads