லோகேந்திர பகதூர் சந்த்

முன்னாள் நேபாள பிரதமர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

லோகேந்திர பகதூர் சந்த் (Lokendra Bahadur Chand) (நேபாளி: लोकेन्द्र बहादुर चन्द (பிறப்பு:15 பிப்ரவரி 1940), நேபாளத்தின் 27வது பிரதம அமைச்சராக 1983 - 1986, 1970, 1997 மற்றும் 2002 - 2003 ஆகிய காலகட்டங்களில் நான்கு முறை பதவி வகித்தவர்.

விரைவான உண்மைகள் லோகேந்திர பகதூர் சந்த், 27வது நேபாள பிரதம அமைச்சர் ...

இவர் நேபாள மன்னர்களிடம் அதிக பற்று கொண்டவர். முதலிரண்டு முறை நேபாள பிரதம அமைச்சராக பதவி வகித்த காலத்தில், இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவராக செயல்பட்டார்.

இவர் 1997ல் ராஷ்டிரிய பிரஜாதந்திரக் கட்சியின் உறுப்பினரானார். நேபாளி காங்கிரஸ் கட்சியின் பிரதம அமைச்சரான செர் பகதூர் தேவ்பாவின் அமைச்சரவையை, நேபாள மன்னர் பதவி விலக்கிய போது, லோகேந்திர பகதூர் சந்த் 11 அக்டோபர் 2002ல் நேபாள பிரதம அமைச்சராக பொறுப்பேற்றார்.

மாவோயிசவாதிகளால் நடத்தப்பட்ட உள்நாட்டு கலவரத்தால், லோகேந்திர பகதூர் சந்த் விலகினார்.

2008 நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றத் தேர்தலில், லோகேந்திர பகதூர் சந்த், ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சியின் சார்பாக விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads