வான்கார்ட் திட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வான்கார்ட் திட்டம்' (Project Vanguard) என்பது பூமியின் சுற்றுவட்டத்துக்கு செய்மதிகளை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு விண்வெளித் திட்டமாகும்.


அக்டோபர் 4, 1957 இல் சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 1 செய்மதியை திடீரென விண்ணுக்கு அனுப்பியதைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா தனது எக்ஸ்புளோரர் திட்டத்தை மீளப் பரிசீலிக்க ஆரம்பித்தது. இத்திட்டத்தின் படி எக்ஸ்புளோரர் 1 என்ற விண்கலத்தை 84 நாட்களில் தயாரித்து ஜனவரி 31, 1958 இல் விண்ணுக்கு ஏவியது. ஆனாலும் இதன் வேலைகள் முடிய முன்னரே சோவியத் ஒன்றியம் தனது இரண்டாவது ஸ்புட்னிக் செய்மதியை நவம்பர் 3, 1957 இல் அனுப்பியது. இதே நேரம் டிசம்பர் 6, 1957 இல் அமெரிக்கா அனுப்பிய வான்கார்ட் TV3 செய்மதி ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறிய காட்சி தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டது விண்வெளிப் பயண ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்கா மிகவும் பின்தங்கி இருந்ததை உலகிற்கு அறிவித்தது.
மார்ச் 17, 1958, வான்கார்ட் I செய்மதி வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. இதுவே பூமியைச் சுற்றிவர அனுப்பப்பட்ட அமெரிக்காவின் இரண்டாவது செய்மதியும் சூரிய சக்தியில் இயங்கிய உலகின் முதலாவது செய்மதியும் ஆகும். இச்செய்மதி 152 மிமீ (6 அங்)) விட்டமும் 1.4 கிகி நிறையும் கொண்ட இச்செய்மதியை சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் "கிறேப் ஃபுருட் செய்மதி" என வர்ணித்தார்[1].
தற்போது பூமியைச் சுற்றிவரும் செய்மதிகளில் மிகப்பழமையானது வான்கார்ட் 1 ஆகும். இதற்கு முன்னார் அனுப்பப்பட்ட ஸ்புட்னிக் 1, ஸ்புட்னிக் 2, எக்ஸ்புளோரர் 1 ஆகியன சுற்றுப்பாதையை விட்டு வெளியேறிவிட்டன.
Remove ads
வான்கார்ட் பயணங்கள்
- வான்கார்ட் TV3 - டிசம்பர் 6, 1957 - செய்மதி ஏவப்படுகையில் வெடித்தது.
- வான்கார்ட் 1 - மார்ச் 17, 1958 - சுற்றுப்பாதையில் பிரவேசித்தது 1.47 கிகி செய்மதி
- வான்கார்ட் TV5 - ஏப்ரல் 28, 1958 - சுற்றுப்பாதையில் பிரவேசிக்கவில்லை 9.98 கிகி செய்மதி
- வான்கார்ட் SLV 1 - மே 27, 1958 - சுற்றுப்பாதையில் பிரவேசிக்கவில்லை 9.98 கிகி செய்மதி
- வான்கார்ட் SLV 2 - ஜூன் 26, 1958 - சுற்றுப்பாதையில் பிரவேசிக்கவில்லை 9.98 கிகி செய்மதி
- வான்கார்ட் SLV 3 - செப்டம்பர் 26, 1958 - சுற்றுப்பாதையில் பிரவேசிக்கவில்லை 9.98 கிகி செய்மதி
- வான்கார்ட் 2 - பெப்ரவரி 17, 1959 - சுற்றுப்பாதையில் பிரவேசித்தது 10.8 கிகி செய்மதி
- வான்கார்ட் SLV 5 - ஏப்ரல் 13, 1959 - சுற்றுப்பாதையில் பிரவேசிக்கவில்லை 10.3 கிகி செய்மதி
- வான்கார்ட் SLV 6 - ஜூன் 22, 1959 - சுற்றுப்பாதையில் பிரவேசிக்கவில்லை 9.98 கிகி செய்மதி
- வான்கார்ட் 3 - செப்டம்பர் 18, 1959 - சுற்றுப்பாதையில் பிரவேசித்தது 22.7 கிகி செய்மதி
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads